சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் வருகிற 19ஆம் தேதி முதல் பாகிஸ்தானில் நடைபெற இருக்கிறது குறிப்பிடத்தக்கது. இதில் நடப்பு சாம்பியன் பாகிஸ்தான் அணி தொடரை நடத்த உள்ளது.
இந்த சூழ்நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு இந்திய அணி பாகிஸ்தானிடம் தோல்வி அடைந்த விதம் குறித்து முன்னாள் பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர் சில கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்.
கடந்த 2017 ஆம் ஆண்டு விராட் கோலி தலைமையில் ஆன இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் பாகிஸ்தானிடம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. இங்கிலாந்தில் நடைபெற்ற இப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச தீர்மானிக்க பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி தொடக்க வீரர் பகார் ஜமானின் 119 ரன்கள் உதவியுடன் வெற்றி இலக்காக இந்திய அணிக்கு 339 ரன்கள் நிர்ணித்தது. ஆனால் இந்திய அணி தொடக்கத்திலேயே சீனியர் வீரர்களின் விக்கெட்டுகளை பறிகொடுத்தது.
விராட் கோலி, ரோஹித் சர்மா மற்றும் தவான் ஆகிய முன்னணி வீரர்கள் விரைவாக வெளியேற இந்திய அணி 158 ரன்களுக்குள் சுரண்டு படுதோல்வி அடைந்தது. மேலும் இந்த போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங் செய்திருக்க வேண்டும் என்று முன்னாள் பேட்டிங் பயிற்சியாளராக செயல்பட்ட சஞ்சய் பாங்கர் சில முக்கியமான கருத்துகளை பேசி இருக்கிறார்.
இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது ” 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்திய அணி டாஸ் ஜெயித்து முதலில் பேட்டிங் தான் செய்திருக்க வேண்டும். ஏனென்றால் இங்கிலாந்தில் எப்போதுமே வானிலை மேகமூட்டத்துடன் இருக்கும். ஆனால் அன்றைய நாளில் வெயில் அடித்ததால் இந்திய அணியின் தேர்வு தப்பாகிவிட்டது. மேலும் இந்திய அணியில் கேப்டன் விராட் கோலி, பயிற்சியாளர் அனில் கும்ப்ளே மற்றும் ரோஹித் சர்மா என அனைவரும் இருந்தார்கள்.
இதையும் படிங்க:கில் தன்னை தானே செதுக்கிட்டாரு.. இங்கிலாந்து பேஸ்மேன்கள் அவர பாத்து இந்த விஷயத்த கத்துக்கோங்க – கெவின் பீட்டர்சன் பேட்டி
அப்போது நானும் அந்த அணியில் இருந்தேன் என்பதும் குறிப்பிடத்தக்கது. இருப்பினும் எங்களது கணிப்பு அன்றைய நாளில் தவறிய காரணத்தால் நாங்கள் இறுதிப்போட்டியில் இழந்தோம். மேலும் அதற்குப் பிறகு ஹர்திக் பாண்டியா மற்றும் ஜடேஜா ஆகியோர் போராட்ட குணத்தை வெளிப்படுத்தினார்கள். இருப்பினும் வெற்றி இலக்கு வெகு தொலைவில் இருந்ததால் எங்களால் வெற்றி பெற முடியவில்லை. மேலும் பகார் ஜமான் ஒற்றை இலக்கத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது பும்ரா வீசிய நோ பால் இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது” என்று கூறி இருக்கிறார்.

