இந்திய அணி மாட்டிக்கிச்சு.. பும்ராவுக்கு இருக்கிற பிரச்சனை இதுதான் – ஆஸி முன்னாள் பவுலர் பேட்டி

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் நடைபெற்று வரும் நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா காயமடைந்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வேகபந்துவீச்சாளர் டேனியல் பிளமிங் பும்ரா குறித்த சில கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிற நிலையில் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்த சூழ்நிலையில் இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் பும்ரா முதல் இன்னிங்ஸில் பந்து வீசியபோது அவருக்கு சிறிய கிராம்ப் ஏற்பட்டது. அதற்குப் பிறகு அவருக்கு பிசியோ வரவழைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. அதற்குப் பின்னர் சில ஓவர்கள் பந்து வீசினாலும் மெதுவாகவே அவர் செயல்பட்டார்.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் இரண்டாவது இன்னிங்ஸில் பும்ரா ஒரு ஓவர் மட்டுமே வீசிய நிலையில் அதற்கு பிறகு அவர் பந்து வீசவில்லை. இந்த சூழ்நிலையில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான மூன்றாவது போட்டி தொடங்க சில நாட்கள் இருக்கும் இடையில் அதற்கான பயிற்சி அமர்வில் பும்ரா கலந்து கொள்ளாமல் இருந்தார். மேலும் சிராஜுக்கு அதிக பணிச்சுமை காரணமாக அவரும் இதில் பந்து வீசவில்லை. இந்த சூழ்நிலையில் ஆஸ்திரேலியாவின் முன்னாள் வீரர் டேனியல் பிளமிங் பும்ரா குறித்து சில கருத்துக்களை கூறியிருக்கிறார்.

இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “பும்ராவின் விஷயத்தில் எனக்கு சில சந்தேகங்கள் இருக்கிறது. பணிச்சுமை காரணமாக சிராஜ் இரண்டாவது இன்னிங்ஸில் பந்து வீசாமல் போகலாம். ஆனால் இரண்டாவது இன்னிங்ஸில் குறிப்பிட்ட ஓவரை பும்ரா வீசியது எனக்கு சந்தேகமாக இருக்கிறது. இதனால் என்ன பிரச்சனை என்பதை அவர்கள் வெளியில் காட்டி விட்டார்கள்.

- Advertisement -

இதையும் படிங்க:ரோஹித் சமிக்கு இதை செய்ய வேணாம்.. அப்படி செஞ்சா இந்திய அணிக்கு வேஸ்ட்தான் – பாக் பசித் அலி பேட்டி

இரண்டாவது இன்னிங்ஸில் அவர் அந்த குறிப்பிட்ட ஓவரை ஏன் வீசினார் என்று எனக்கு புரியாமலேயே இருக்கிறது. அவருக்கு முதல் இன்னிங்ஸில் சில அசவுகரியங்கள் இருந்தது. அதனால் அவர் ஆடுகளத்தில் மெதுவாகவே செயல்பட்டார். மேலும் பும்ரா இரண்டாவது இன்னிங்ஸில் பந்து வீசியபோது அவரது ரகசியம் தற்போது வெளிப்பட்டு விட்டது” என்று கூறி இருக்கிறார். எனவே ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான அடுத்த போட்டியில் பும்ரா விளையாடுவாரா? அல்லது வேறு யாராவது சேர்க்கப்படுவாரா? என்ற தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles