சிராஜ் இதை செஞ்சிருக்க கூடாது.. எங்கள நல்லா தூண்டி விட்டுட்டாரு – ஆஸி டேவிட் வார்னர் கருத்து

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தற்போது அடிலெய்டு மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த சூழ்நிலையில் ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்ஸ் இந்திய அணியை விட சிறப்பாக விளையாடி உள்ளது.

- Advertisement -

இந்த நிலையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் டேவிட் வார்னர் முகமது சிராஜ் குறித்து சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.

- Advertisement -

ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரான இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் நிலையில் முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா 295 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த சூழ்நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டி தற்போது அடிலெய்டு மைதானத்தில் நடைபெற்று வரும் நிலையில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 180 ரன்கள் குவிக்க அதற்குப் பிறகு ஆஸ்திரேலியா அணி 337 ரன்கள் குவித்தது.

- Advertisement -

இதற்கு முக்கிய காரணமாக ஆஸ்திரேலியா அணியின் டிராவிஸ் ஹெட் சிறப்பாக விளையாடி 141 பந்துகளில் 140 ரன்கள் குவித்து இந்திய அணிக்கு பெரிய அச்சுறுத்தலாய் அமைந்தார். இவர் ஏற்கனவே இந்திய அணிக்கு எதிரான ஒரு நாள் உலகக் கோப்பை மற்றும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி ஆகிய இரண்டு போட்டியிலும் சிறப்பாக விளையாடி இந்திய அணியின் கனவை உடைத்தார். இந்த சூழ்நிலையில் அவரது விக்கெட் வீழ்த்திய பிறகு முகமது சிராஜ் தனது ஆக்ரோசத்தை வெளிப்படுத்த அதற்கு ஹெட் ஏதோ கூறிவிட்டு சென்றார். இந்த சூழ்நிலையில் ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் டேவிட் வார்னர் சிராஜ் குறித்து சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.

இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “இப்போது இந்திய அணி அதிக ரன்கள் பின்தங்கி இருக்கிறது என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். சிராஜிடம் இந்திய பேட்ஸ்மேன்கள் சற்று அமைதியாக இரு நாங்கள் இரண்டாவது இன்னிங்ஸ் விளையாட வேண்டும் என்கிற ரீதியில் அவரிடம் பேசி இருப்பார்கள் என்று நினைக்கிறேன். மேலும் நாங்கள் இதே மனநிலையில் இருப்போம் என்று நினைக்க வேண்டாம்.

- Advertisement -

இதையும் படிங்க:ஆஸி வீரர்கள் அந்த லெஜண்டுக்கு அப்ரோ.. பும்ராக்கு அதிகமா பயப்படுறாங்க – பாக் பாசித் அலி கருத்து

அதே சமயத்தில் முகமது சிராஜ் தனது ஆக்ரோசத்தை வெளி காட்டியதன் மூலமாக இந்த டெஸ்ட் தொடருக்கான ஒரு அமைப்பை அவர் ஏற்படுத்தி இருக்கிறார் என்று உணர்கிறேன். எனவே இத்தகைய போட்டி முறையைத்தான் எனக்கும் மிகப் பிடித்திருக்கிறது” என்று டேவிட் வார்னர் கூறியிருக்கிறார். தற்போது இரண்டாவது இன்னிங்ஸ் விளையாடி வரும் இந்திய அணி ஐந்து விக்கெட் இழப்புக்கு 128 ரன்கள் குவித்து விளையாடி வரும் நிலையில் 29 ரன்கள் முன்னிலையில் இருப்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் மூன்று நாட்கள் போட்டி மீதம் இருக்கும் நிலையில் இந்திய அணி என்ன செய்யப் போகிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles