ஐபிஎல் கிரிக்கெட்டில் லக்னோ சூப்பர் ஜெயின்ஸ் அணிக்காக விளையாடிய அதிவேக இளம் வேகப் பந்துவீச்சாளர் மயங்க் யாதவ் தற்போது காயம் காரணமாக இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் இடம் பெறவில்லை.
இந்த சூழ்நிலையில் மயங்க் யாதவ் குறித்து ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் பிராட் ஹாக் சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.
கடந்த ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்காக அறிமுகமாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் மயாங்க் யாதவ். 150 கிலோ மீட்டருக்கு மேல் வீசும் இவரது அதிவேகப்பந்து வீச்சு இந்திய முன்னாள் வீரர்கள் மட்டுமின்றி தற்போது இந்திய வீரர்களையும் அதிக அளவில் கவர்ந்திருக்கிறது. ஆனால் அவ்வப்போது இவருக்கு ஏற்படும் காயம் தான் பெரிய பிரச்சனையாகி வருகிறது. ஐபிஎல் தொடரின் சில போட்டிகளில் விளையாடிய நிலையில் காயம் காரணமாக அதற்குப் பிறகு மீதம் உள்ள போட்டிகளில் இவர் விளையாடவில்லை.
இவர் பந்து வீசும் போது உடலின் பக்கவாட்டு பகுதியில் அதிக அழுத்தம் ஏற்படுவதால் இவருக்கு அடிக்கடி காயம் ஏற்படுவது தவிர்க்க முடியாத வகையில் இருக்கிறது. இந்த சூழ்நிலையில் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான தொடரில் அறிமுகமான நிலையில் தற்போது காயம் காரணமாக வெளியேறி இருக்கிறார். இந்த சூழ்நிலையில் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் பிராட் ஹாக் ஐபிஎல் தொடரில் மட்டும் கவனம் செலுத்தாமல் நீண்ட வடிவ டெஸ்ட் தொடரிலும் கவனம் செலுத்த வேண்டும் என்ற சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.
இது குறித்து அவர் விரிவாக கூறும்போது “மயாங்க் யாதவ் தற்போது காயம் அடைந்திருக்கிறார். அவர் எத்தனை முதல் தர போட்டிகளில் விளையாடி இருக்கிறார் என்று பார்த்தால் ஒரே ஒரு முதல் தர போட்டியில் மட்டுமே விளையாடி இருக்கிறார். பெரிதாக இவர் நீண்ட வடிவ கிரிக்கெட் தொடரில் விளையாடவில்லை. 150 கிலோமீட்டர் வேகத்திற்கு மேல் வீசவும் ஆட்கள் இருக்கிறார்கள் ஆனால் இவரது வேகம் சுத்தமாக துல்லியமாக இருக்கிறது. ஆனால் இவர்கள் தங்களுக்கு ஐபிஎல் தொடரில் வாய்ப்பு கிடைத்தால் மட்டுமே போதும் என்று நினைக்கிறார்கள்.
இதையும் படிங்க:தம்பி ஜடேஜா.. உங்க காலம் முடிஞ்சு.. வாஷிங்டன் சுந்தர் இல்ல இந்த இன்னொரு தமிழக வீரர் உங்க இடத்தை தூக்க வராரு – ஆகாஷ் சோப்ரா பேட்டி
இவர்கள் ஐபிஎல் வடிவ தொடரில் காண்ட்ராக்ட் கிடைத்தவுடன் அனைத்துமே முடிவுக்கு வந்துவிட்டது என்று நினைத்து விடுகிறார்கள். நீண்ட வடிவ தொடரில் உள்ள சவால்களை சமாளித்து எப்படி விளையாடுவது என்பது குறித்து இவர்களுக்கு தெரிவதில்லை. நீண்ட வடிவத்தொடர்களில் உள்ள சவால்களை சமாளித்து எப்படி திறம்பட செயல்பட வேண்டும் என்றும் இவர்களுக்கு தெரிவதில்லை. மேலும் சகிப்புத்தன்மையும் இவர்களிடத்தில் இல்லாமல் போகிறது “என்று கூறி இருக்கிறார்.

