தம்பி ஜடேஜா.. உங்க காலம் முடிஞ்சு.. வாஷிங்டன் சுந்தர் இல்ல இந்த இன்னொரு தமிழக வீரர் உங்க இடத்தை தூக்க வராரு – ஆகாஷ் சோப்ரா பேட்டி

ICC சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரில் ஜடேஜாவுக்கு பதிலாக வருண் சக்கிரவர்த்தி களமிறங்க வாய்ப்பு உள்ளதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா கருத்து.

- Advertisement -

சுழற்பந்துவீச்சில் அசத்தி வரும் வருண் சக்கிரவர்த்தி பற்றி சமீப நாட்களாக சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இடம்பெறுவர் என பல செய்திகள் வெளிவந்து கொண்டு இருந்தன இந்நிலையில் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

- Advertisement -

ஐபிஎல் தொடரில் அசத்தி இந்திய அணியில் இடம் பிடித்த வருண் சமீபத்தில் நடந்த சர்வதேச T20 போட்டிகளிலும் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார் குறிப்பாக வங்கதேசம் தென்னாப்பிரிக்கா மற்றும் உள்ளூர் போட்டிகளிலும் அசத்தி வருகிறார். 2024 – 2025 விஜய் ஹசாரே டிராபி தொடரில் தமிழக அணிக்காக அதிக விக்கெட்டுகளை எடுத்தவர் வருண் சக்கிரவர்த்தி.

- Advertisement -

ஆகாஷ் சோப்ரா கருத்து

தொடர்ந்து உள்ளூர் போட்டிகள் மற்றும் T20 போட்டிகளில் சிறந்து விளங்கி வரும் வருண் சக்கிரவர்த்தி பற்றிய செய்திகள் வெளிவந்தது தொடர்ந்து ஆகாஷ் சோப்ராவிடம் யூடியூப் சேனல் பேட்டியில் 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணியில் இடம் கிடைக்குமா என கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு : “வருண் சக்கரவர்த்தி அடுத்தடுத்து நன்றாக விளையாடி அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி வருகிறார். விஜய் ஹசாரே கோப்பையிலும் சிறப்பாக ஆடினார், அதில் அவர் ராஜஸ்தானுக்கு எதிராக 5 விக்கெட்டுகளை வீழ்த்தி தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அவர் இந்திய டி20 அணிக்கு திரும்பியது முதல், ஒவ்வொரு முறையும் சிறப்பாக விளையாடி அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி வருகிறார்.

- Advertisement -

ஆகவே தான் அவரை சுற்றி பல செய்திகள் சூடுபிடித்துள்ளது, இந்திய மீடியாவில் சமீப காலமாக கசிவு செய்திகள் வருகின்றன, அதில் சில உண்மையா செய்திகளாகவும் உள்ளது ஆகவே வருண் சக்ரவர்த்தி 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு தேர்தெடுக்கப்படலாம் என்றே தோன்றுகிறது அப்படி அவர் தேர்வு செய்யப்பட்டால், யார் வெளியே செல்வது ? ரவீந்திர ஜடேஜா வெளியே செல்வாரா? அப்படி தான் இருக்கும் என நான் அறிகிறேன்” என தெரிவித்தார்.

ஜடேஜாவின் இடத்தில் வருண் ?

ஜடேஜாவின் ஒருநாள் போட்டி எதிர்காலத்தை குறித்தும் வருண் சக்ரவர்த்தி வாய்ப்பு மட்டும் அக்சர் படேல் ஆல்ரவுண்டர் ஆக தேர்தெடுக்கப்படலாம் என்பதை விவரித்தார் ஆகாஷ் சோப்ரா.

இது குறித்து அவர் கூறுகையில் : “நான் அதை பற்றி கேள்விப்படவில்லை ஆனால் இப்போது ரவீந்திர ஜடேஜா அணியில் எடுக்கப்படாமல் போகலாம் விளையாடும் 11 பேர் கொண்ட அணியில் அவருக்குப் பதிலாக வருண் சக்கரவர்த்தியை நீங்கள் பார்க்கலாம், இதற்கு ஒரு வலுவான வாய்ப்பு உள்ளது. அதுமட்டுமின்றி நீங்கள் அக்சர் பட்டேலையும் பார்ப்பீர்கள்” என கூறினார்.

2025 ஆம் ஆண்டின் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியை விரைவில் அறிவிக்கவுள்ளது பிசிசிஐ.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles