கோலி தப்பு செய்யாம இருக்க.. சச்சின்கிட்ட இதை கத்துக்கோங்க – ஆஸி கில்கிரிஸ்ட் அறிவுரை

இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் வீரரான விராட் கோலி ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் சதம் அடித்து அசத்தினாலும் இரண்டாவது போட்டியில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் மோசமாக ஆட்டம் இழந்து வெளியேறினார்.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் ஆஸ்திரேலியாவின் முன்னாள் ஜாம்பவான் வீரர் கில்கிரிஸ்ட் விராட் கோலி இந்த விஷயத்தை சச்சின் டெண்டுல்கரிடம் இருந்து பின்பற்ற வேண்டும் என்று கூறுகிறார்.

- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து ஐந்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய ஜாம்பவான் வீரர் விராட் கோலி சதம் அடித்து தனது இழந்த பேட்டிங் பார்மை மீட்டெடுத்தார். இருந்தாலும் விராட் கோலி இரண்டாவது போட்டியில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் முறையே 7,11 ரன்களில் வெளியேறி ஆட்டம் இழந்தார். தற்போது விராட் கோலி மீது அதிகப்படியான விமர்சனங்கள் எழுந்து வருகிறது.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் சச்சின் டெண்டுல்கர் இதேபோன்று சரிவில் இருந்த போது ஆஸ்திரேலியாவில் 2004ஆம் ஆண்டு சிட்னியில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் 170 ரன்கள் வரை வெளியே செல்லும் பந்தை தொடாமலேயே விளையாடினார். அதாவது உடம்பை நோக்கி வரக்கூடிய பந்துகளுக்கு மட்டுமே ரன்கள் எடுத்த அவர் ஸ்டம்ப் லைனில் இருந்து வெளியே செல்லக்கூடிய பந்துகளை தொடவே இல்லை. அந்தப் போட்டியில் சச்சின் டெண்டுல்கர் 241 ரன்கள் குவித்து ஆட்டநாயகன் விருது வென்றார். இந்த சூழ்நிலையில் இதே பார்முலாவை விராட் கோலி பின்பற்ற வேண்டும் என்று கில்கிரிஸ்ட் கூறி இருக்கிறார்.

இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “ஒரு பேட்ஸ்மேனுக்கு திறமை என்பது எதிர் அணியின் பந்துவீச்சாளரிடமிருந்தோ அல்லது எதிரணியின் திறமையில் இருந்து வருவதோ கிடையாது. உங்கள் காதுகளுக்கு இடையே ஏற்படக்கூடிய சத்தம் தான் பெரிய விஷயமாக இருக்கும். விராட் கோலி தனிப்பட்ட உணர்வுகளுக்கு இடையே விளையாடுகிறார் என்று நான் கூறவில்லை. 2004ஆம் ஆண்டு சிட்னி மைதானத்தில் சச்சின் டெண்டுல்கர் எங்களுக்கு எதிராக விளையாடியதை விராட் கோலி பார்க்க வேண்டும் என்று கூறுகிறேன்.

- Advertisement -

இதையும் படிங்க:12 வருஷம் அதை பண்ணதால.. இந்தத் தொடர தோக்க எங்களுக்கு எல்லா உரிமையும் இருக்கு.. ரோஹித் சர்மா பேட்டியால் ரசிகர்கள் கோபம்

அப்போது சச்சின் டெண்டுல்கர் தனக்குள் ‘நான் வெளியே செல்லும் பந்துக்கு ஒருபோதும் விளையாடப் போவதில்லை என்னை நோக்கி வரும் பந்துகளுக்கு மட்டுமே விளையாடப் போகிறேன்’ என்று முடிவு எடுத்து விளையாடி சிறப்பாக செயல்பட்டார். எனவே விராட் கோலி இதனை பின்பற்றி இதே முறையில் விளையாட வேண்டும்” என்று கூறியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles