ரோகித் சர்மாவோட இந்த ரூட்தான் சரி.. அவர் பயமில்லாமல் இதை பண்றாரு- ஆரோன் பின்ச் விளக்கம்

இந்த டி20 உலக கோப்பையில் இந்திய அணி வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. இதுவரை விளையாடிய ஐந்து போட்டிகளிலும் இந்திய அணி தொடர்ச்சியாக வெற்றிகளை பெற்று நாளை ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியில் விளையாட உள்ளது.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா குறித்து ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரர் ஆரோன் பின்ச் சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.

- Advertisement -

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான ரோகித் சர்மா போட்டியின் தொடக்கத்தில் இருந்தே அதிரடியாக விளையாடும் முறையை பின்பற்றி வருகிறார். இதை டி20 உலக கோப்பையில் மட்டுமல்ல ஒரு நாள் உலக கோப்பையிலும் இதே பாணியை பின்பற்றி அதிரடியாக விளையாடினார். விளைவு இந்திய அணியின் ஸ்கோர் முதல் 10 ஓவர்களுக்கு உள்ளாகவே நல்ல அடித்தளத்தை பெற்று வருகிறது.

- Advertisement -

இதனால் பின்னால் வரும் பேட்ஸ்மேன்கள் எந்த அழுத்தமும் இன்றி நிதானமாக விளையாட உதவுகிறது. இதே பாணியை தற்போது டி20 உலக கோப்பையிலும் ரோஹித் சர்மா பின்பற்றி வருகிறார். இது வங்கதேச அணிக்கு எதிரான சூப்பர் 8 போட்டியிலும் 11 பந்துகளில் 23 ரன்கள் குவித்து ஓரளவு நல்ல அடித்தளத்தை பெற்றுக் கொடுத்தார். இனிவரும் போட்டிகளிலும் இவர் இதே அதிரடியை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே ரோகித் சர்மாவின் இந்த அதிரடி ஆட்டமே சரியான வழி என்றும் இளம் வீரர்கள் ரோஹித் சர்மாவை பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரர் ஆரோன் சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார். இதுகுறித்து ஆரோன் பின்ச் கூறும் பொழுது “போட்டியில் தாக்கத்தை ஏற்படுத்துவது குறித்து ரோகித் சர்மா பேசுவதை நான் வரவேற்கிறேன். வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் இரண்டாவது ஓவரிலேயே இந்திய வீரர்கள் தங்களது ஆதிக்கத்தை செலுத்த ஆரம்பித்து விட்டனர்.

- Advertisement -

இங்கு வெற்றி என்பது ஒரு வீரர் அடிக்கும் 50 ரன்களிலோ அல்லது 100 ரன்களிலோ வருவதில்லை. முன்பெல்லாம் இளம் வீரர்களிடம் சதம் அல்லது அரை சதங்கள் அடிக்குமாறு கூறுவார்கள். ஆனால் இப்போது 18 முதல் 20 ரன்கள் வரை அடிப்பதற்காக வருகின்றனர்.இப்போது அவர்கள் நான்கு ஓவர்கள் வரை விளையாடி அணியை வெற்றி பெற வைக்க உதவுகிறார்கள். அதே வழியை தான் தற்போது ரோகித் சர்மாவும் பின்பற்றி வருகிறார்.

இதையும் படிங்க:நாங்க ஜெயிக்க இந்தியா மாதிரி ஒரு டீம்தான் வேணும்.. ஆப்கன்க்கு எதிரான தோல்விக்கு இதுவே காரணம்.. வம்புக்கு இழுக்கும் மிட்சல் மார்ஸ்

கடந்த உலக கோப்பையிலும் ரோஹித் சர்மா இதே வழிமுறையை தான் பின்பற்றி விளையாடினார். அப்படி விளையாடும் போது ரோஹித் சர்மா சமரசம் செய்து கொள்வதில்லை. தனிப்பட்ட முறையில் விளையாடுவது எப்படி என்பதை விட அணியில் நலனுக்காக விளையாடுவதையே அவர் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார். இளைஞர்களும் ரோஹித் சர்மாவை பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும்” என்று பின்ச் கூறி இருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles