ஆப்கானிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான டி20 உலக கோப்பை சூப்பர் 8 போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் முன்னாள் சாம்பியன் ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தி இருக்கிறது.
இந்த நிலையில் அடுத்து நடைபெற உள்ள இந்திய அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே ஆஸ்திரேலியா அணி அரை இறுதிக்கு தகுதி பெறும் என்று நிலையில், ஆஸ்திரேலியா கேப்டன் மிட்சல் மார்ஸ் சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி தொடக்க ஆட்டக்காரர்களின் அபாரமான பேட்டிங்கால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஆப்கானிஸ்தான் அணி 6 விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் குவித்தது. ஆப்கானிஸ்தான் அணியில் அதிகபட்சமாக விக்கெட் கீப்பர் குர்பாஸ் 49 பந்துகளில் 60 ரன்கள், இப்ராஹிம் ஜர்தான் 48 பந்துகளில் 51 ரன்களும் குவித்தனர்.
170 ரன்கள் வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பின்னால் வந்த பேட்ஸ்மேன்கள் விரைவில் ஆட்டம் இழந்ததால் ஆப்கானிஸ்தான் அணியால் 148 ரன்கள் மட்டுமே குவிக்க முடிந்தது. ஆஸ்திரேலியா அணி தரப்பில் கம்மின்ஸ் இரண்டாவது முறையும் ஹாட்ரிக் விக்கெட்டுகள் வீழ்த்தினார். பின்னர் வெற்றி இலக்கை நோக்கி களம் இறங்கிய ஆஸ்திரேலியா அணி ஆப்கான் அணியினரின் அபாரமான பந்துவீச்சால் 127 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் பறிகொடுத்தது. 21 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கன் அணி வெற்றி பெற்று வரலாறு படைத்திருக்கிறது.
இந்த எதிர்பாராத தோல்வியின் மூலம் ஆஸ்திரேலியா அணி கேப்டன் மார்ஸ் சில முக்கிய கருத்துக்கள் கூறியிருக்கிறார் இது குறித்து அவர் கூறும் பொழுது “ஆப்கான் அணியினர் இந்த போட்டியில் 20 ரன்கள் அதிகமாக எடுத்து விட்டனர். இந்தத் தொடரில் நிறைய அணிகள் முதலில் பந்து வீசினார்கள். எனவே டாசுக்கு பிறகு வெற்றி தோல்வி நிர்ணயிக்கப்பட்டதாக நான் நினைக்கவில்லை. இன்றைய நாள் எங்களுக்கு சரியானதாக அமையவில்லை.
இன்றைய ஆடுகளம் விளையாடுவதற்கு நன்றாக அமையவில்லை. ஆனால் இரண்டு அணிகளுமே நன்றாக விளையாடின. இந்த போட்டியில் நாங்கள் தோல்வியடைந்துள்ளதால் அடுத்த போட்டி இந்திய அணிக்கு எதிராக நிச்சியம் நாங்கள் வெற்றி பெற்றாக வேண்டும். நாங்கள் வெற்றி பெறுவதற்கு இந்திய அணியை போன்று சிறந்த அணி வேறு எதுவும் இருக்க முடியாது” என்று இந்திய அணியை வம்புக்கு இழுக்கும் விதமாக பேசி உள்ளார்.
இதையும் படிங்க:பண்ட் சூரியகுமார் கிடையாது.. இந்தியா தப்பிக்கிறதே இவங்க 2 பேர்னாலதான்.. இல்லன்னா என்னைக்கோ சிக்கிருப்பாங்க.. நானி சுரேஷ் பேட்டி
இதனால் இந்திய அணி நாளை இதற்கு சரியான பதிலடி கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாளைய போட்டியில் இந்திய அணியை வெற்றி பெற்றால் மட்டுமே ஆஸ்திரேலிய அணி அடுத்த சுற்றை பற்றி நினைத்துப் பார்க்க முடியும். இல்லையென்றால் அடுத்த போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி வங்கதேச அணியை வீழ்த்தினால் இந்திய அணியோடு அரை இறுதிக்கு தகுதி பெற்று விடும். இந்திய அணி தற்போது முதல் அணியாக அடுத்த சுற்று தகுதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

