இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கிடையான சூப்பர் 8 போட்டியில் இந்திய அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் இரண்டாவது வெற்றியை பதிவு செய்து தற்போது அரையிறுதிக்கு முன்னேறி இருக்கிறது.
இந்திய அணியில் இவர்கள் இருவரும் மிக முக்கிய வீரர்கள் எனவும், இவர்கள் இல்லை என்றால் இந்திய அணி பிரச்சனையில் மாட்டிக் கொள்ளும் என்று வர்ணனையாளர் நானி சுரேஷ் தெரிவித்துள்ளார்.
இந்த டி20 உலக கோப்பையில் இந்திய அணி தற்போது தொடர்ச்சியாக ஐந்தாவது வெற்றியை பதிவு செய்துள்ளது. விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகிய இரண்டு பேட்ஸ்மேன்கள் தற்போது ஓரளவு பேட்டிங் ஃபார்முக்கு வந்துள்ளனர். தவிர ரிஷப் பண்ட் மற்றும் சூரியகுமார் யாதவ் ஆகிய இருவரும் தொடர்ச்சியாக ரன்கள் குவித்து கொண்டிருக்கின்றனர்.
சிவம் துபேவும் கடந்த போட்டியில் 24 பந்துகளில் 34 ரன்கள் குவித்து தனது பேட்டிங் ஃபார்மை வெளிப்படுத்தி இருக்கிறார். அதே வேளையில் பந்துவீச்சை பொறுத்தவரை குல்தீப் யாதவ் தற்போது வாய்ப்பு பெற்று சிறந்த முறையில் விக்கெட் வீழ்த்தி வருகிறார். இவர்களைத் தவிர இந்திய அணியில் இரண்டு வீரர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றார்கள்.
இவர்கள்தான் இந்திய அணியின் துருப்புச் சீட்டு எனவும் இவர்கள் இல்லையென்றால் இந்திய அணி மிகப்பெரிய பிரச்சனையில் சிக்கிக் கொள்ளும் எனவும், முன்னாள் வர்ணனையாளர் ஆன நானி சுரேஷ் தெரிவித்து இருக்கிறார். இதுகுறித்து அவர் விரிவாக கூறும் பொழுது “இந்திய அணி இந்த டி20 உலக கோப்பையில் சிறப்பாக வெற்றிகளை குவித்து வருகிறது. குறிப்பாக இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவின் கேப்டன்ஷிப் அற்புதமாக இருக்கிறது.
இந்திய அணியை பொறுத்தவரை ஹர்திக் பாண்டியா மற்றும் பும்ரா ஆகியோர் முக்கிய துருப்பு சீட்டு வீரர்கள். பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் ஹர்திக் பாண்டியாவும், பந்துவீச்சில் முழு பொறுப்பையும் பும்ரா ஏற்றுக்கொண்டு தற்போது இந்திய அணிக்காக சிறந்த முறையில் செயல்பட்டு வருகிறார்கள். இவர்கள் இருவர்தான் தற்போது இந்த உலக கோப்பையில் தொடர்ந்து சிறப்பான பங்களிப்பை வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றனர். இவர்கள் இருவர் இல்லை என்றால் இந்திய அணி நிச்சயமாக மிகப்பெரிய பிரச்சனையில் மாட்டிக் கொள்ளும்” என்று கூறி இருக்கிறார்.
இதையும் படிங்க:2023 உலக கோப்பையை ஞாபகப்படுத்திய மேக்ஸ்வெல்.. குல்புதீன் அபார பந்துவீச்சு.. ஆஸியை வீழ்த்தி வரலாறு படைத்த ஆப்கன்
இந்த உலகக் கோப்பையில் பந்துவீச்சில் அசத்தி வந்த ஹர்திக் பாண்டியா தற்போது வங்கதேச அணிக்கு எதிரான போட்டியின் மூலம் பேட்டிங்கிலும் ஃபார்முக்கு வந்திருக்கிறார். அதேபோல பும்ரா அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் இரண்டு விக்கெட்டுகளும், பாகிஸ்தான் அணிக்கு எதிராக போட்டியில் மூன்று விக்கட்டுகளும், தற்போது வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் மூன்று விக்கெட்டுகள் என தொடர்ச்சியாக இந்திய அணிக்கு சிறந்த பங்களிப்பை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்.

