இதுவரைக்கும் பார்த்தது ட்ரெய்லர்.. இவரோட மெயின் ஆட்டமே இனிமேதான்- பிரெட்லீ எச்சரிக்கை

சிறந்த வீரர்களை கொண்ட இந்திய கிரிக்கெட் அணி தற்போது இரண்டாவது முறையாக டி20 உலக கோப்பையை வென்று வரலாறு படைத்துள்ளது.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் ஆஸ்திரேலியாவின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஆன பிரட்லீ இந்திய வீரர் ஒருவரை குறிப்பிட்டு பாராட்டி பேசி இருக்கிறார்.

- Advertisement -

சமீப காலமாகவே ஐசிசி தொடர்களை பொருத்தவரை இந்திய அணி அரை இறுதி அல்லது இறுதிப் போட்டியில் வந்து தோல்வியடைந்து வெளியேறும் நிலையே இதுவரை இருந்தது. காரணம் அணி வலுவாக இருந்த போதிலும் ஏதோ ஒரு குறையாக இறுதியில் பேட்டிங் அல்லது பந்துவீச்சு என இரண்டில் ஒன்று சரியாக இந்திய அணிக்கு அமையாது. இப்படியான சூழ்நிலையில் இந்திய அணி ஐசிசி தொடர்களை இழந்து வந்தது.

- Advertisement -

சமீபத்தில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் பேட்டிங், பந்துவீச்சு என இரண்டுமே சரியான வீரர்களை எடுத்து அதில் வெற்றியும் கண்டுள்ளது. குறிப்பாக இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளரான பும்ரா உலகத்தின் அபாயகரமான பந்துவீச்சாளராக திகழ்ந்து வருகிறார். எந்த சூழ்நிலையில் பந்தை அவர் கையில் கொடுத்தாலும் அதை இந்திய அணிக்கு சாதகமாக ஆட்டத்தை மாற்றி விட்டுச் செல்லக்கூடிய திறமை அவரிடம் உண்டு.

இந்த நிலையில் ஆஸ்திரேலியாவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆன பிரட்லீ பும்ரா குறித்து சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார். இது குறித்து அவர் கூறும் பொழுது ” பெஞ்சமின் பட்டன் திரைப்படத்தில் பிராட் பிட்டின் வயது எப்படி ரிவர்சில் போகுமோ அதேபோலத்தான் தற்போது பும்ராவின் ஆட்டமும் ஆரம்பித்து இருக்கிறது. பும்ராவின் பந்துவீச்சு இந்த காலத்தில் மட்டுமல்ல அவர் எந்த காலத்தில் பந்து வீசினாலும் எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி ஏற்படுத்துவார்.

- Advertisement -

புதிய பந்தில் தொடக்கத்திலும் சிறப்பாக வீசுவார், மிடில் வரிசையிலும் சிறப்பாக வீசுவார், குறிப்பாக டெத் ஓவர்களில் வெற்றியை நிர்ணயிக்கும் திறமையும் உண்டு. டெஸ்ட் கிரிக்கெட்டிலும் சிறப்பாக பந்து வீசி வரும் பும்ரா வெள்ளை பந்து கிரிக்கெட்டில் ஓவருக்கு 12 முதல் 13 ரன்கள் வரை தேவைப்பட்டால் இறுதியில் அபாரமாக யார்க்கர் பந்துகளை வீசுவார்.

இதையும் படிங்க:கம்பேக் கொடுத்த கில் சுந்தர்.. இந்திய அணி சிறப்பான பந்துவீச்சு.. 23 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே தோல்வி

பும்ராவை எந்த காலத்தில் ஒப்பிட்டுப் பார்த்தால் அவர் உலகத்தரமான வீரர் தான். பும்ராவுடன் இணைந்து பணியாற்றியதும், அவர் பந்து வீசும் போது வர்ணனையாளராக செயல்படுவதையும் எண்ணி நான் மகிழ்ச்சி அடைகிறேன். இதேபோன்று ரோகித் சர்மா சிறந்த கேப்டனாக இருக்கிறார். பும்ராவை எந்த சூழ்நிலையில் எப்படி பயன்படுத்த வேண்டும் என்று அவருக்கு நன்றாக தெரிகிறது. இவரை வைத்து முக்கிய கட்டத்தில் ரோஹித் சர்மா எதிரணிகளுக்கு நெருக்கடி ஏற்படுத்தி வருகிறார்” என்று கூறி இருக்கிறார்

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles