கோலிக்கு இருக்கும் பிரச்சனை.. சச்சின் பாண்டிங்க்கும் இருந்தது.. அவங்க இப்படித்தான் மீண்டனர் – ஆஸி கிரேக் சேப்பல் பேட்டி

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டி இன்னும் சில தினங்களில் மெல்போர்னில் உள்ள கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது.

- Advertisement -

இந்த நிலையில் விராட் கோலியின் பேட்டி அணுகுமுறை குறித்து ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் கிரேக் சேப்பல் சில கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்.

- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் முடிசூடா மன்னனாக திகழ்ந்து வரும் விராட் கோலி சமீப காலமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகவும் தடுமாறி வருகிறார். கடந்த நான்கு ஆண்டுகளில் விராட் கோலி இடம் இருந்து டெஸ்டில் மூன்று சதங்கள் மட்டுமே வந்திருக்கிறது. சமீபத்தில் நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மோசமாக விளையாடிய விராட் கோலி அதற்குப் பிறகு ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் போட்டியில் சதம் அடித்து இழந்த தனது பேட்டிங் ஃபார்மை மீட்டெடுத்தார்.

- Advertisement -

இருப்பினும் அதற்குப் பிறகு நடைபெற்ற இரண்டு போட்டிகளிலும் மோசமாக விளையாடி விரைவாக ஆட்டமிழந்து வெளியேறி வரும் நிலையில் ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் கிரேக் சேப்பல் சச்சின் டெண்டுல்கர் மற்றும் ரிக்கி பாண்டிங் ஆகியோர் கிரிக்கெட்டின் தங்களது கடைசி கட்டத்தில் இதேபோன்று தடுமாறி வந்ததாகவும், விராட் கோலி தற்போது அதே நிலையில் தான் இருக்கிறார் என சில கருத்துக்களை கூறியிருக்கிறார். மேலும் அதிலிருந்து வெளியே எப்படி வருவது எனவும் பேசி இருக்கிறார்.

இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “இதிலிருந்து தெரிய வருவது என்னவென்றால் ஒரு வீரர் தனது பேட்டிங் அணுகுமுறையில் மாற்றம் ஏற்பட்டு இருக்கிறது என்று தான் கூற வேண்டும். விராட் கோலி பொதுவாகவே அடித்து ஆடக்கூடிய ஒரு வீரர். சமீப காலமாக விராட் கோலி பேட்டிங்கில் தடுமாறி வருவது கண்கூடாக தெரிகிறது. இதே பிரச்சனையை தான் தங்களது கிரிக்கெட்டின் இறுதிக் கட்டத்தில் சச்சின் டெண்டுல்கர் மற்றும் ரிக்கி பாண்டிங் ஆகியோர் சந்தித்தார்கள்.

- Advertisement -

இதையும் படிங்க:இனிதான் இருக்கு ஆட்டமே.. டிராவிஸ் ஹெட்டின் பெரிய வீக்னஸ கண்டு பிடிச்சிட்டோம்.. 4வது டெஸ்ட்ல இதான் பண்ண போறோம் – ஆகாஷ் தீப் பேட்டி

சச்சின் மற்றும் பாண்டிங் ஆகியோர் சாதாரணமாக விளையாடுவதற்கு அவர்களுக்கு 20 முதல் 30 ரன்கள் தேவைப்பட்டது. அதை அவர்கள் எடுத்த பிறகு மீண்டும் பழைய நிலைமைக்கு செல்ல முடிந்தது. எனவே நீங்கள் 20 முதல் 30 ரன்கள் எடுக்கும் போது மீண்டும் பழைய நிலைக்கு நான் செல்வதாக உணர்வீர்கள். அதற்குப் பிறகு உங்களால் சாதாரணமாக விளையாட முடியும்” என்று கூறி இருக்கிறார். எனவே விராட் கோலி அடுத்த இரண்டு போட்டிகளில் சிறப்பாக விளையாடி மீண்டும் தனது பேட்டிங் ஃபார்மை மீட்டெடுப்பார் என்ற ரசிகர்களால் நம்பப்படுகிறது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles