2022ஆம் ஆண்டு ஐபிஎல் புதிய வரவான குஜராத் டைட்டன்ஸ் அணி அறிமுகமான முதல் தொடரிலேயே ஐபிஎல் கோப்பையை வென்று அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக தற்போது மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக இருக்கும் ஹர்திக் பாண்டியா பெரும் பங்காற்றினார் என்று குறிப்பிடத்தக்கது.
தமிழக அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடக்கூடிய தமிழக வீரர்கள் மிகவும் அரிது. ஆனால் குஜராத் டைட்டன்ஸ் அணியில் ஐந்து தமிழக வீரர்கள் இடம் பெற்று இருக்கிறார்கள். அவர்கள் அவ்வப்போது வாய்ப்பும் பெற்று விளையாடி வருகிறார்கள். அந்த ஐந்து வீரர்களை பற்றி காண்போம்
1.விஜய் சங்கர்
தமிழகத்தைச் சேர்ந்த 33 வயதான விஜய் சங்கர் 2014ஆம் ஆண்டு ஐபிஎல்லில் அறிமுகமாகி தற்போது குஜராத் அணிக்காக விளையாடி வருகிறார். இவர் 66 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 138 ரன்கள் குவித்ததோடு ஆறு அரைசதங்களையும் அடித்துள்ளார். அவரது அதிகபட்ச ஐபிஎல் ஸ்கோர் 63 ஆகும். 2024ஆம் ஆண்டு ஏலத்தில் விஜய் சங்கரை குஜராத் அணி 1.40 கோடிக்கு வாங்கியது.
2.சாய் சுதர்சன்
கடந்த 2022ஆம் ஆண்டு குஜராத் அணிக்காக அறிமுகமான தமிழகத்தை சேர்ந்த சாய் சுதர்சன் இதுவரை 14 போட்டிகளில் விளையாடி 552 ரன்கள் குவித்துள்ளார். இவரது அதிகபட்ச ஸ்கோர் கடந்த சீசனின் சென்னை அணிக்கு எதிராக இறுதிப் போட்டியில் அடித்த 93 ரன்கள் ஆகும். இவர் குஜராத் அணியில் விளையாடி தன் திறமையை நிரூபித்ததால் தற்போது இந்திய அணியில் இடம் பிடித்து விளையாடி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
3.ஷாருக்கான்
தமிழகத்தைச் சேர்ந்த மற்றொரு ஆல் ரவுண்டரான ஷாருக்கான் டிஎன்பிஎல் போட்டியில் கோவை அணிக்காக விளையாடி பிரபலம் அடைந்தார். ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணிக்காக விளையாடி வந்த இவர் இதுவரை 33 போட்டிகளில் விளையாடி 426 ரன்கள் குவித்துள்ளார். இவரது அதிகபட்ச ஸ்கோர் 47 ஆகும். குஜராத் அணி இவரின் ஆல் ரவுண்டர் சேவையை கருதி 7.40 கோடிக்கு சமீபத்தில் வாங்கியது குறிப்பிடத்தக்கது.
4.சாய் கிஷோர்
சென்னையைச் சேர்ந்த ஆர்த்தடாக்ஸ் சுழற் பந்துவீச்சாளரான சாய் கிஷோர் 2022ஆம் ஆண்டு குஜராத் அணியில் அறிமுகமாகி விளையாடினார். ஆறு போட்டியில் விளையாடிய அவர் ஏழு விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இவரது அதிகபட்ச பவுலிங் சராசரி 2/7 ஆகும். கடந்த சீசனில் குஜராத் அணியில் இவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. தற்போது கில் தலைமையிலான குஜராத் அணியில் இந்த சீசனில் முதல் போட்டியிலே வாய்ப்பு பெற்று விளையாடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
5.சந்திப் வாரியர்
குஜராத் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது சமியின் காயம் காரணமாக இவரை அடிப்படை விலையான ஐம்பது லட்சத்திற்கு குஜராத் அணி வாங்கியது. இவர் இதுவரை ஐந்து ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே இவரை மிக விரைவில் குஜராத் அணியில் பார்க்கலாம்.
(குஜராத் டைட்டன்ஸ்) ஐபிஎல் 2024 அணி:
டேவிட் மில்லர், ஷுப்மன் கில் (கேப்டன்), மேத்யூ வேட், விருத்திமான் சாஹா, கேன் வில்லியம்சன், அபினவ் மனோகர், பி. சாய் சுதர்சன், தர்ஷன் நல்கண்டே, விஜய் சங்கர், ஜெயந்த் யாதவ், ராகுல் தெவாடியா, ச நூர் அஹ்மத் கிஷோர், ரஷித் கான், ஜோசுவா லிட்டில், மோஹித் சர்மா, அஸ்மத்துல்லா ஓமர்சாய், உமேஷ் யாதவ், ஷாருக் கான், சுஷாந்த் மிஸ்ரா, கார்த்திக் தியாகி, மானவ் சுதர், ஸ்பென்சர் ஜான்சன், சந்தீப் வாரியர்.

