தற்போது இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் இந்திய அணி இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் 32 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவி இருப்பதன் மூலம் 27 வருடங்கள் கட்டிக் காத்து வந்த சாதனையை இழந்திருக்கிறது.
2024 ஆம் வருட டி20 உலக கோப்பை வெற்றிக்கு பிறகு ஜிம்பாப்வே அணியுடன் டி20 தொடரை 4-1 என்ற கணக்கில் வென்ற இந்தியா, இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து மூன்று டி20 மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் இந்தியா வென்றது. இதனைத் தொடர்ந்து 3 போட்டிகளைக் கொண்ட ஒரு நாள் தொடர் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது.
கொழும்பில் ஆகஸ்ட் இரண்டாம் தேதி நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 230 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இலக்கை துரத்தி ஆடிய இந்திய அணி 230 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இதனால் முதல் ஒரு நாள் போட்டி சமனில் முடிவடைந்தது. இதனைத் தொடர்ந்து இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்று கொழும்பில் நடைபெற்றது.
இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை 240 ரன்கள் எடுத்தது. இந்த இலக்கை நோக்கி ஆடிய இந்தியா 208 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் கில் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 97 ரன்கள் சேர்த்தபோதும் இந்திய அணி 208 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இலங்கை அணியின் ஜெஃப்ரி வாண்டர்சே சிறப்பாக பந்துவீசி 6 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதன் காரணமாக இந்திய அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியதோடு 3 போட்டிகளை கொண்ட ஒரு நாள் தொடரில் 1-0 என்ற கணக்கில் பின்தங்கி இருக்கிறது. இதன் மூலம் 27 வருடங்கள் கட்டிக் காத்து வந்த இந்தியாவின் ஆதிக்கம் தற்போது முடிவுக்கு வந்திருக்கிறது. இதற்கு முன்பு 1997 ஆம் வருடம் இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே இந்தியாவில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டி தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிவடைந்தது.
அதன் பிறகு நடைபெற்ற இரு நாடு அணிகளுக்கு இடையேயான அனைத்து ஒருநாள் போட்டி தொடர்களையும் இந்திய அணி வெற்றி பெற்று இலங்கை அணிக்கு எதிராக ஆதிக்கம் செலுத்தி வந்தது. தற்போதைய தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் பின்தங்கி இருப்பதால் தொடரை கைப்பற்றும் வாய்ப்பை இழந்திருக்கிறது.
கௌதம் கம்பீர் இந்தியா அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட முதல் ஒரு நாள் போட்டி தொடரில் இந்திய அணி பின்தங்கி இருப்பதன் மூலம் 27 வருடங்களாக இந்திய அணி இலங்கை அணிக்கு எதிராக தொடர்ந்து வந்த ஆதிக்கம் முடிவுக்கு வந்திருக்கிறது. 1997 ஆம் வருடம் இலங்கையில் வைத்து நடைபெற்ற இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான ஒரு நாள் போட்டி தொடரை அர்ஜுனர் ரனதுங்கா தலைமையிலான இலங்கை அணி 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து இந்தியாவில் நடைபெற்ற ஒரு நாள் போட்டி தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிவடைந்தது.
இதனைத் தொடர்ந்து 27 வருடங்களாக நடைபெற்ற அனைத்து ஒரு நாள் போட்டி தொடர்களிலும் இந்திய அணி வெற்றி பெற்று தனது ஆதிக்கத்தை நிலைநாட்டியிருந்தது. கங்குலி மற்றும் தோனி ஆகியோர் இலங்கை அணிக்கு எதிராக தொடர்ந்து வெற்றிகளை குவித்து வந்தனர். இவர்களைத் தொடர்ந்து கேப்டனாக பணியாற்றிய விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும் இலங்கை அணிக்கு எதிரான ஆதிக்கத்தை தொடர்ந்தது.
தற்போதைய தொடரில் இந்தியா பின்தங்கி இருப்பதன் மூலம் தொடரை கைப்பற்றும் வாய்ப்பை இழந்திருக்கிறது. இதன் காரணமாக இலங்கை அணிக்கு எதிராக 27 வருடங்களாக இந்தியா கட்டிக் காத்து வந்த சாதனை தற்போது முடிவுக்கு வந்திருக்கிறது. கௌதம் கம்பீர் பயிற்சியாளராக பொறுப்பேற்ற முதல் தொடரிலேயே இந்திய அணிக்கு இவ்வாறான பின்னடைவு ஏற்பட்டிருப்பது கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. புதன்கிழமை நடைபெறும் மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றி பெற்று தொடரையாவது சமன் செய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்பில் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

