தற்போது நடைபெற்று வரும் உலக கோப்பை தொடரில் 39 ஆட்டங்கள் முடிவடைந்து இருக்கிறது. இந்த ஆட்டங்களின் முடிவில் இந்தியா 16 புள்ளிகளுடனும் தென்னாப்பிரிக்கா 12 புள்ளிகளுடனும் ஆஸ்திரேலியா 12 புள்ளிகளுடனும் அரை இறுதிப் போட்டிகளுக்கு தகுதி பெற்றிருக்கின்றன. மற்றும் ஒரு நாலாவது இடத்திற்கு நியூசிலாந்து பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையே மும்முனை போட்டி நிலவி வருகிறது.
நேற்று நடைபெற்ற போட்டியில் ஆஸ்திரேலியா அணி ஆப்கானிஸ்தான் அணியை மூன்று விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அரை இறுதிப் போட்டிக்கு தங்களது இடத்தை பதிவு செய்து கொண்டது. இந்தப் போட்டியில் அதிரடியாக விளையாடிய மேக்ஸ்வெல் மிகச் சிறப்பாக ஆடி இரட்டை சதம் எடுத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த போட்டியில் இவர் பல உலக சாதனைகளையும் நிகழ்த்தி இருக்கிறார்.
இந்திய அணி கடந்த அக்டோபர் 8-ம் தேதி தங்களது உலக கோப்பை எண் முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணியுடன் விளையாடியது. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா அணியை 199 ரன்கள் செய்த இந்தியா இரண்டாவது பேட்டிங் என்பது 2 ரன்கள் 3 விக்கெட்டுகள் இழந்திருந்தது. அதன் பிறகு விராட் கோலி மற்றும் கே எல் ராகுல் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் பிறகு நடைபெற்ற அனைத்துப் போட்டிகளிலும் இந்திய அணியின் ஆதிக்கமே தொடர்ந்து.
ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் அணிகளை இந்தியா வெற்றி பெற்ற பின்பு நியூசிலாந்து அணி இந்தியாவிற்கு சவாலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நியூசிலாந்து அணியை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்தியா இங்கிலாந்து அணியை 100 ரன்கள் வித்தியாசத்திலும் இலங்கை அணியை 32 ரன்கள் வித்தியாசத்திலும் வீழ்த்தியது. இந்த உலகக்கோப்பை தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் தென்னாப்பிரிக்கையா அணி இந்தியாவிற்கு சவாலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 326 ரன்கள் எடுத்தது. விராட் கோலி 49வது சதம் எடுத்து சச்சின் டெண்டுல்கரின் சாதனையை சமன் செய்தார். இதனைத் தொடர்ந்து விளையாடிய தென்னாப்பிரிக்கா 83 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இந்திய அணி 243 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி உலகக் கோப்பை புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டது.
இந்திய அணியின் இந்த வெற்றிக்கு பிறகு ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் சுழற் பந்துவீச்சாளரான பிராட் ஹாக் இந்திய அணி குறித்து சமூக வலைதளத்தில் தனது பாராட்டுகளை பதிவு செய்து இருக்கிறார். இது தொடர்பாக பதிவிட்டு இருக்கும் அவர்” தென்னாப்பிரிக்கா அணியுடன் வெற்றிக்கு பிறகு உலகக் கோப்பைக்கு இறுதிப்போட்டி தேவையில்லை. இந்திய அணி மற்றும் உலகின் சிறந்த வீரர்களை உள்ளடக்கிய ரெஸ்ட் ஆப் த வேர்ல்ட் அணி இடையே போட்டி நடத்தி உலகக்கோப்பையை முடித்து வையுங்கள். இந்தியா அபாரமாக உள்ளது. அவர்களை வீழ்த்த ஆளில்லை. இந்த உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி ஜொலித்து வருகிறது” என பதிவு செய்திருக்கிறார்.
After last night it looks like no need for a final, have India v rest of the world match to finish off the tournament. They have been scintillating. #CWC23 #INDvSA
— Brad Hogg (@Brad_Hogg) November 6, 2023
தற்போது நடைபெற்று வரும் உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் இரண்டாவது அரையிறுதியில் மோதுவது முடிவாகி இருக்கிறது. இந்தப் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் பதினாறாம் தேதி நடைபெற இருக்கிறது. இந்திய அணி நவம்பர் 15 ஆம் தேதி நடைபெற இருக்கும் முதல் அரை இறுதி போட்டியில் புள்ளிகள் பட்டியலில் நான்காம் இடம் பெறும் அணியுடன் மோத உள்ளது.

