இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒரு நாள் டி20 கிரிக்கெட் போட்டி நாளை கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற உள்ளது.
இந்த சூழ்நிலையில் நாளைய போட்டி குறித்து இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் மெக்கல்லம் இந்திய அணிக்கு எதிரான திட்டங்கள் குறித்து சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.
இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான தோல்விகளை சந்தித்துள்ள நிலையில் சொந்த மண்ணில் இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற உள்ள டி20 மற்றும் ஒரு நாள் தொடரில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. இதில் முதலில் ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரும் அதற்குப் பிறகு மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரும் நடைபெற உள்ளது.
இங்கிலாந்து தொடருக்குப் பிறகு அடுத்ததாக இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் கலந்து கொள்ள உள்ள நிலையில் இந்தத் தொடர் இந்திய வீரர்களுக்கு மிகப்பெரிய பயிற்சி போட்டியாக இருக்கும் என்று பார்க்கப்படுகிறது. இந்த சூழ்நிலையில் இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் பிரண்டன் மெக்கல்லம் ஜாஸ் பட்லரை வைத்து சில திட்டங்கள் தீட்டி இருப்பதாக சில முக்கிய கருத்துகளை கூறி இருக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறும் பொழுது “அணியின் கேப்டன் பட்லர் இந்த தொடர் முழுவதிலும் ஒரு பேட்ஸ்மேன் ஆக மட்டுமே செயல்படுவார். அவர் விக்கெட் கீப்பிங் செய்யப் போவதில்லை அவருக்கு பதிலாக தொடக்க வீரர் பில் சால்ட் அந்த வேலையை கவனித்துக் கொள்வார். பட்லர் களத்தில் இருக்கும் போது தான் பந்துவீச்சாளர்களோடு விவாதிக்கவும், தனது கருத்துக்களை உடனடியாக கூறவும், களத்தில் முக்கிய மாற்றங்களை செய்யவும் அவரால் எளிதாக அணுக முடியும்.
இதையும் படிங்க:என் மகனுக்கு எதிரா அங்க வேலை செய்றாங்க.. கேரள கிரிக்கெட் சங்கத்துக்கு எதிரா நாங்க எதுவும் பேசல – சஞ்சு சாம்சனின் தந்தை பேட்டி
மேலும் அவரோடு கடந்த சில வருடங்களாகவே எனக்கு நல்ல நட்பு இருக்கிறது. எனவே வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் அவரோடு சேர்ந்து இங்கிலாந்து அணியை மேல் நோக்கி எடுத்துச் செல்வதே எங்களது விருப்பம். உலகின் சிறந்த அணிக்கு எதிராக நாங்கள் விளையாட உள்ளோம். இது மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் இருக்கிறது. உலகின் சக்தி வாய்ந்த பேட்டிங் வரிசை எங்கள் அணியில் இருக்கிறது. மேலும் சிறந்த சூழல் பந்துவீச்சு மற்றும் ராக்கெட் வேகத்தில் பந்து வீசக்கூடிய வீரர்கள் இருக்கிறார்கள். எனவே இந்த தொடர் நிச்சயம் சுவாரசியமாக இருக்கும்” என்று கூறியிருக்கிறார்.

