நம்பவே முடியல.. ரிஷப் பண்ட் இத செஞ்சதை பார்த்து ஆச்சரியம் அடைந்தேன் – இங்கி ஹாரி ப்ரூக் பேட்டி

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிற நிலையில் இதுவரை இரண்டு போட்டிகள் முடிவடைந்து இருக்கிறது. அதில் ஒன்றில் இந்திய அணியும் ஒன்றில் ஆஸ்திரேலியா அணியும் வெற்றி பெற்றுள்ளன.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரர் ரிஷப் பண்ட் குறித்து இங்கிலாந்து அணியின் அதிரடி பேட்ஸ்மேன் ஹாரி ப்ரூக் சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.

- Advertisement -

கிரிக்கெட்டில் சிறந்த அணிகளில் ஒன்றாக கருதப்படும் இங்கிலாந்து ஒரு நாள் கிரிக்கெட்டில் அதிரடியான ஆட்ட முறையை பின்பற்றி வந்த நிலையில் அதே அணுகுமுறையை டெஸ்ட் தொடரிலும் கடைபிடித்தது. விளைவு அதிரடியாக ஆடி ஒவ்வொரு தொடரையும் இங்கிலாந்து அணி கைப்பற்றியது. தற்போது வரை அதே அணுகு முறையை இங்கிலாந்து அணி கடைபிடித்து வரும் நிலையில் அந்த அணியில் விளையாடி வரும் மிடில் வரிசை ஆட்டக்காரர் ஹாரி ப்ரூக் சிறந்த ஆட்டத்தினை வெளிப்படுத்தி வருகிறார்.

- Advertisement -

உலக சேம்பியன்ஷிப் தொடரில் இரண்டு சதங்கள் மற்றும் ஒரு அரை சதம் என சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தி வரும் நிலையில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ரிஷப் பண்ட் விளையாடிய விதம் குறித்து பாராட்டி சில கருத்துக்களை பேசியிருக்கிறார். முதல் பந்தில் இருந்தே ரிஷப் பண்ட் அடித்து ஆடும் நோக்கில் விளையாடிய விதம் தன்னை மிக கவர்ந்ததாக சில கருத்துக்களை ஹாரி ப்ரூக் கூறுகிறார்.

இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது ” ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ரிஷப் பண்ட் பயமே இல்லாமல் ஆக்ரோஷமான முறையில் விளையாடியதை பார்த்தீர்களா? அவர் விளையாடும் முறையைப் போன்றே முதல் பந்தில் இருந்தே தைரியமாக விளையாட வேண்டும் என்ற அணுகுமுறையை தான் நாங்கள் கடந்த இரண்டு வருடங்களாக இங்கிலாந்து அணிக்காக செய்து வருகிறோம். இதே முறையைத்தான் நாங்கள் பின்பற்றி அதிரடியாக விளையாடி ரன்கள் குவிக்க தயாராக இருக்கிறோம்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -

இதையும் படிங்க :3வது டெஸ்ட்டில் இந்தியா ஜெய்க்கணும்னா அஷ்வின் டீம விட்டு தூக்குங்க.. பதிலுக்கு இவர ஆட வைங்க – புஜாரா அட்வைஸ்

ரிஷப் பண்ட் டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் என எதிலும் பாரபட்சம் பார்க்காமல் ஒரே மாதிரியான ஆக்ரோஷ அணுகு முறையைத்தான் கடைப்பிடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இரண்டாவது போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்திருக்கும் நிலையில் மூன்றாவது போட்டியில் இந்திய அணி பேட்டிங் மற்றும் பந்துவீச்சை மேம்படுத்த வேண்டியது அவசியம். எனவே ரிஷப் பண்ட் போன்ற வீரர்கள் மூன்றாவது போட்டியில் நிலைத்து நின்ற விளையாட வேண்டியது அவசியம்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles