இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான பார்டர் கவாஸ்கர் டிராபி 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருக்கிறது. முதல் போட்டியை செய்வதறியாது இழந்த ஆஸ்திரேலியா, அடுத்தப் போட்டியில் பயங்கர கம்பேக் கொடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்குத் தகுத்திப் பெற இந்திய அணி குறைந்தது 3 போட்டிகளில் வெல்ல வேண்டிய நெருக்கடியில் உள்ளது. இந்த வேளையில் இந்திய அணியின் இந்தத் தோல்வி இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் வல்லுனர்கள் மத்தியில் ஏமாற்றத்தை உண்டாக்கியுள்ளது. ஆஸ்திரேலியாவுக்கும் இந்தத் தொடர் மிக முக்கியம் என்பதால் அடுத்தப் போட்டியில் வெற்றியைப் பெற்று முன்னிலைப் வகிக்க இரு அணிகளும் போராடும்.
இந்நிலையில், அடுத்தப் போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் செய்ய வேண்டிய மற்றும் செய்யக் கூடாத இரு மாற்றங்களைப் பற்றி முன்னாள் டெஸ்ட் லெஜன்ட் புஜாரா பேசியுள்ளார். அவர் கூறியதாவது, ” இந்திய அணியில் ஒரே ஒரு மாற்றம் மட்டுமே அடுத்தப் போட்டிக்கு இருக்கும் என நான் நினைக்கிறேன். அஷ்வின் இடத்தில் வாஷிங்டன் சுந்தர் உள்ளே வருவார். ” என்றார்.
இதற்க்கு காரணமாக இந்திய அணியின் பேட்டிங்கை பலப்படுத்துவதாக புஜாரா கூறினார். இரண்டாவது போட்டியில் இந்திய அணி இரண்டு இன்னிங்சிலும் 180 & 176 ரன்கள் மட்டுமே சேர்த்து. மறுபக்கம் ஆஸ்திரேலியாவின் பேட்டிங் மிகவும் வலிமையாகத் தெரிந்தது.
மேலும் ஹர்ஷித் ராணாவை அணியை விட்டு நீக்குவதற்கு பெரிய எதிர்ப்பைத் தெரிவித்துள்ளார். ” ஹர்ஷித் ராணா இடத்தில் எதேனும் மாற்றம் வேண்டுமானால் எனக் கேட்டால் நிச்சயம் இல்லை. அவர் ஒரு நல்ல பவுலர். முதல் போட்டியில் கிடைத்த வாய்ப்பில் சிறப்பாகச் செயல்பட்டு வெற்றிக்கு பங்காற்றியுள்ளார். ஒரு போட்டியில் அவர் சரியாக செய்யவில்லை என்பதற்கக்காக வரை விட்டுவிடக் கூடாது. ” என்றார் புஜாரா.

