இந்தியா பெயரை உபயோகித்து.. பாகிஸ்தான் அணிக்கு எச்சரிக்கை கொடுத்த இங்கிலாந்து கேப்டன் பட்லர்.. என்ன காரணம்.!

நேற்று நடைபெற்ற இங்கிலாந்து மற்றும் நெதர்லாந்த அணிகளுக்கு இடையேயான போட்டியில் இங்கிலாந்து அணி 160 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று நடைபெற்று வரும் உலக கோப்பையில் இரண்டாவது வெற்றியை பதிவு செய்திருக்கிறது. மேலும் இந்த போட்டியில் அடைந்த தோல்வியின் மூலம் நெதர்லாந்து உலகக்கோப்பை தொடரிலிருந்து அதிகாரப்பூர்வமாக வெளியேறி இருக்கிறது.

- Advertisement -

நடப்பு உலகக் கோப்பை தொடரில் 10 அணிகள் பங்கு பெற்றன. இதில் இந்தியா ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் அரை இறுதி போட்டிகளுக்கு தகுதி பெற்ற நிலையில் இங்கிலாந்து பங்களாதேஷ் நெதர்லாந்து மற்றும் இலங்கை ஆகிய நான்கு அணிகள் உலகக் கோப்பையில் இருந்து வெளியேறி இருக்கிறது. நியூசிலாந்து பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் நான்காவது இடத்திற்கு கடுமையாக போராடி வருகின்றனர்.

- Advertisement -

இந்நிலையில் நேற்று நடைபெற்ற 40 வது போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 339 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் பென் ஸ்டோக்ஸ் அபாரமாக விளையாடி 108 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இதனைத் தொடர்ந்து விளையாடிய நெதர்லாந்து அணி 179 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இங்கிலாந்து அணியின் பந்துவீச்சில் மொயின் அலி மற்றும் ஆதில் ரசீது ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

- Advertisement -

இங்கிலாந்து அணி தங்களுடைய இறுதி லீக் போட்டியில் பாகிஸ்தான் அணியுடன் வருகின்ற நவம்பர் 11ஆம் தேதி விளையாட இருக்கிறது. இந்தப் போட்டி கொல்கத்தாவில் வைத்து நடைபெறுகிறது. இந்தப் போட்டியை இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் மிக முக்கியமான போட்டி என குறிப்பிட்டு இருக்கிறார். இது தொடர்பாக போட்டி முடிந்த பின் பேசிய அவர் இந்தியாவிலிருந்து வெளியேறுவதற்கு முன்பு ஒரு சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்த உலகக் கோப்பையில் தங்களது பயணத்தை முடிக்க இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக பேசியிருக்கும் அவர் ” பாகிஸ்தான் அணியுடன் எங்களது கடைசி லீக் ஆட்டம் முக்கியமான ஒரு போட்டி இந்த உலகக் கோப்பையில் நாங்கள் எதிர்பார்த்த அளவில் விளையாடவில்லை. எனினும் எங்களது கடைசி ஆட்டத்தில் எங்களுடைய சிறப்பான விளையாட்டை நிரூபித்து வெற்றியுடன் இந்தியாவில் இருந்து உலகக் கோப்பை சுற்றுப்பயணத்தை முடித்து வெளியேற விரும்புகிறோம்” என்று தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -

மேலும் தொடர்ந்து பேசிய அவர் ” பாகிஸ்தான் அணி ஒரு மிகச் சிறப்பான அணி. அவர்களுடன் ஒரு பரபரப்பான ஆட்டத்தை நாங்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறோம். இந்தப் போட்டியில் பெற்ற வெற்றி எங்களுக்கு நம்பிக்கையை கொடுத்திருக்கிறது. இதன் மூலம் நாங்கள் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இந்தியாவில் இருந்து வெற்றியோடு புறப்படுவோம்” என்ன தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெறும் போட்டி பாகிஸ்தான் அணியின் அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்வதற்கு முக்கியமான ஒரு போட்டியாகவும். அதே நேரம் 2025 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி போட்டிக்கு தகுதி பெறுவதற்கான முக்கிய போட்டியாக இங்கிலாந்து அணிக்கு இது அமைந்திருக்கிறது. எனவே இந்தப் போட்டி பரபரப்பான ஒன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles