ENG vs SL.. 25.2 ஓவர்களில் நடப்புச் சாம்பியனை வீழ்த்திய ஸ்ரீலங்கா.. வேர்ல்ட் கப்பில் தொடரும் இலங்கை அணியின் ஆதிக்கம்.. புள்ளிகள் பட்டியலில் ஜெட் வேகம்.!

தற்போது நடைபெற்று வரும் உலக கோப்பையின் 25ஆவது போட்டியில் இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகள் இன்று பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் விளையாடின. இந்தப் போட்டி இரு அணிகளுக்குமே முக்கியமான போட்டி என்பதால் பரபரப்பான போட்டியாக அமையும் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டது.

- Advertisement -

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் முதலில் பேட்டிங் தேர்வு செய்தார். இலங்கை அணியில் அனுபவ வீரரான ஏஞ்சலோ மேத்யூஸ் இன்று இடம் பெற்றிருந்தார். முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணிக்கு டேவிட் மலான் மற்றும் ஜானி பேர்ஸ்டோ நல்ல ஒரு துவக்கத்தை அமைத்துக் கொடுத்தனர். அணியின் ஸ்கோர் 45 ஆக இருந்தபோது டேவிட் மலான் 28 ரண்களில் ஆட்டம் இழந்தார். அவரைத் தொடர்ந்து ஜோ ரூட் மூன்று ரன்களில் ரன் அவுட் ஆகி வெளியேற சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த பேர்ஸ்டோ 30 ரின்களில் அவுட் ஆனார். இதனால் இங்கிலாந்து அணி தடுமாற்றத்தை சந்தித்தது.

- Advertisement -

இதனைத் தொடர்ந்து களம் இறங்கிய ஜோஸ் பட்லர் 8 ரன்னிலும் அதிரடி வீரர் வில்லியாம் லிவிங்ஸ்டண் ஒரு ரன்னிலும் லகிரு குமாராவின் வபந்து வீச்சில் ஆட்டம் இழந்தனர். இதனால் இங்கிலாந்து 45/0 என்ற நிலையில் இருந்து 85/5 என்ற பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டது. இந்நிலையில் பென்ஸ்டோக்ஸ் உடன் ஜோடி சேர்ந்தார் மொயின் அலி. இந்த ஜோடி இங்கிலாந்து அணியை கௌரவமான இலக்கத்திற்கு எடுத்துச் செல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மொயின் அலியின் விக்கெட்டை 15 ரன்களில் வீழ்த்தினார் மேத்யூஸ்.

- Advertisement -

ஒருபுறம் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் நிலைத்து நின்று ஆடிய பென் ஸ்டோக்ஸ் 43 ரன்னில் ஆட்டம் இழக்க அவரைத் தொடர்ந்து கிரீஸ் வோக்ஸ் ரன் எதுவும் எடுக்காமலும் அதில் ரஷீத் ரன்களிலும் இரண்டு ரன்னிலும் மார்க் வுட் 5 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். டேவிட் வில்லி 14 ரண்களில் ஆட்டம் இழக்காமல் இருந்தார். இங்கிலாந்து அணி 33.2 ஓவர்களில் 156 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இலங்கை அணியின் பந்துவீச்சில் லகிரு குமாரா 3 விக்கெட்டுகளும் மேத்யூஸ் மற்றும் ரஜிதா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

இதனைத் தொடர்ந்து 157 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணியின் துவக்க வீரரான குஷால் பெரேரா 4 ரன்னிலும் கேப்டன் குஷால் மெண்டிஸ் 11 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். அதன் பிறகு பதும் நிசாங்கா அக்காவுடன் ஜோடி சேர்ந்தார் சமர விக்கிரமா. இந்த ஜோடி மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இலங்கை அணியை வெற்றியின் பாதைக்கு அழைத்துச் சென்றது. இங்கிலாந்து அணியின் பந்துவீச்சாளர்கள் எவ்வளவோ முயற்சி செய்தும் இவர்களது விக்கெட்டை வீழ்த்த முடியவில்லை .

- Advertisement -

மிகச் சிறப்பாக ஆடிய நிசாங்கா மற்றும் சமர விக்கிரமா இருவரும் அரை சதம் எடுத்தனர். இவர்களது சிறப்பான ஆட்டத்தால் இலங்கை அணி 25.4 ஓவர்களில் 160 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.நிசாங்கா 83 பந்துகளில் 7 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸருடன் 77 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். இவருடன் ஆடிய சமர விக்ரமா 54 பந்துகளில் 7 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 65 ரன்களில் களத்தில் இருந்தார். இலங்கை அணி எட்டு விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தியதோடு தொடர்ந்து மூன்றாவது முறையாக அந்த அணியை உலகக்கோப்பையில் வென்றிருக்கிறது.

இந்தப் போட்டியில் 35 ரன்கள் விட்டுக் கொடுத்து மூன்று விக்கெட்டுகள் வீழ்த்திய லகிரு குமாரா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் 2023 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் இலங்கை அணி இரண்டாவது வெற்றியை பெற்றிருக்கிறது. மறுபுறம் இங்கிலாந்து விளையாடிய 5 ஆட்டங்களில் நான்கு போட்டிகளில் தோல்வியை தழுவி ஒன்பதாவது இடத்தில் இருக்கிறது. இங்கிலாந்து அணியுடன் ஆன வெற்றியின் மூலம் இலங்கை புள்ளிகள் பட்டியலில் ஐந்தாவது இடத்திற்கு முன்னேறி இருக்கிறது. இனி வரும் ஆட்டங்களிலும் தொடர்ந்து வெற்றி பெற்றால் இலங்கை அணி அரையிறுதிக்கு தகுதி பெறுவதற்கு வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது. மறுபுறம் நடப்புச் சாம்பியன் ஆன இங்கிலாந்து இனி வரும் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles