அய்யய்யோ போச்சா.. சென்னை அணிக்கு விழுந்த மிகப்பெரிய அடி.. தத்தளிக்கும் சிஎஸ்கே நிர்வாகம்.. முக்கிய வீரர் விலகல்.. ஐபிஎல் 2026

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வருகிற மார்ச் 28ஆம் தேதி முதல் கோலாகலமாக நடைபெற உள்ள நிலையில் இதற்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. இந்த சூழ்நிலையில் ஐந்து முறை சாம்பியன் ஆன சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கடந்த ஆண்டில் ஏற்பட்ட தவறுகளை சரி செய்து இந்த ஆண்டு மீண்டும் வலுவாக களம் இறங்குகிறது.

- Advertisement -

பேட்டிங் யூனிட்டை முழுவதும் பலப்படுத்தி உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பந்து வீச்சில் இணைத்து ஏற்கனவே பலமாக இருந்த நிலையில் மிகுந்த நம்பிக்கையோடு இந்த ஐபிஎல் தொடரை எதிர்கொள்ள ஆர்வமாக இருந்தது. இந்த சூழ்நிலையில் சென்னை அணிக்கு திடீர் என்று எதிர்பாராத விதமாக முக்கிய பவுலர் ஒருவர் காயமடைந்து ஐபிஎல் தொடரிலிருந்து முழுவதுமாக வெளியேறி இருக்கிறார்.

- Advertisement -

அவர் ஆஸ்திரேலியாவை சேர்ந்த நாதன் எல்லீஸ், கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக விளையாடினார். இருப்பினும் கடந்த ஆண்டு அதிக போட்டிகளில் விளையாடாத நிலையில் அவர் இந்த ஆண்டு முக்கிய பௌலராக இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் தற்போது காயம் காரணமாக முழுவதும் இந்தத் தொடரை விட்டு வெளியேறியிருக்கிறார். தற்போது இது சென்னை அணிக்கு மிகப்பெரிய அடியாக காணப்படுகிறது.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles