இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதிய முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரில் முன்னிலை பெற்று இருக்கிறது. இரண்டு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை இந்தூரில் வைத்து நடைபெற இருக்கிறது.
சமீப காலமாக இந்திய அணியில் பேட்டிங் ஆர்டரை வலுப்படுத்த 8-வது இடத்தில் சார்துல் தாக்கூர் களமிறக்கப்பட்டு வருகிறார். இவர் பவுலிங் ஆல்ரவுண்டர் என்பதாலும் இந்திய அணிக்கு இறுதி ஓவர்களில் வேகமாக ரன்கள் குவிக்க உதவுவார் என்பதாலும் தொடர்ந்து களம் இறக்கப்பட்டு வருகிறார்.சார்துல் தாக்கூர் மூன்றாவது வேகப்பந்துவீச்சாளராக அணியில் விளையாடுவதால் முன்னணி வேகப்பந்துவீச்சாளர்களில் ஒருவரை அணியில் இருந்து நீக்க வேண்டிய சூழ்நிலைக்கு அணி நிர்வாகம் தள்ளப்பட்டு இருக்கிறது.
வலுவான வேகப்பந்து வரிசையைக் கொண்ட இந்திய அணியில் சார்துல் தாக்கூர் ஆல்ரவுண்டராக விளையாடுவதால் முன்னணி வேகப்பந்துவீச்சாளரான முகம்மது சமி ஆடும் லெவனில் இடம்பெறாமல் வெளியில் உட்கார வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதலாவது ஒரு நாள் போட்டியில் முகமது சமி மிகச் சிறப்பாக பதிவுசி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இது ஒரு நாள் போட்டியில் அவரது சிறப்பான பந்துவீச்சாக இருப்பதோடு டேட்டிங்க்கு சாதகமான ஆடுகளத்தில் ஆஸ்திரேலியா அணியை 276 ரன்களில் கட்டுப்படுத்தவும் உதவியது.
முகமது சமியின் சிறப்பான பந்துவீச்சு இந்திய கிரிக்கெட் வட்டாரங்களில் புதிய விவாதங்களை உருவாக்கி இருக்கிறது. ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் விமர்சகர்கள் இந்திய அணி மூன்று முன்னணி வேகப்பந்துவீச்சாளர்களுடன் களம் இறங்க வேண்டும் என்ற வாதத்தை முன் வைத்திருக்கின்றனர். முகமது சமி போன்ற ஒரு வீரரை வெளியே வைத்து சார்துல் தாக்கூர் போன்ற வீரருக்கு வாய்ப்பு கொடுப்பது அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் எனவும் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் சுழற் பகுதி வீச்சாளர் பியூஸ் சாவ்லா இது தொடர்பாக இஎஸ்பிஎன் கிரிக்இன்ஃபோ இணையதளத்திற்கு அளித்த பேட்டியில் முகம்மது சமியின் முக்கியத்துவம் பற்றி பேசியிருக்கிறார். இது தொடர்பாக தனது கருத்தை பதிவு செய்திருக்கும் அவர்”சார்துல் தாக்கூர் போன்ற ஒரு வீரருக்காக முகமது சமி போன்ற ஒரு திறமையான பந்துவீச்சாளரை வெளியே வைப்பது சரியான அணுகுமுறை இல்லை. உலகக்கோப்பை நடைபெறுவது இந்தியாவில் என்பதை மறந்து விடக்கூடாது. இங்கு பெரும்பாலான ஆடுகளங்கள் பேட்டிங்க்கு சாதகமாகவே இருக்கும். அதுபோன்ற சூழ்நிலையில் அணியின் முன்னணி பந்துவீச்சாளர்களின் பங்களிப்பு முக்கியமானதாக இருக்கும்” என்று தெரிவித்தார்.
மேலும் இது தொடர்பாக பேசிய அவர்” சார்துல் தாக்கூர் பேட்டிங்கில் ரண்களை குவிக்கிறார் என்பதை நான் மறுக்கவில்லை. ஆனால் அவர் எப்போதும் 20 பந்துகளில் 30 அல்லது 40 ரன்கள் எடுக்கக்கூடிய வீரர் இல்லை. பெரும்பாலான போட்டிகளில் ஒரு பந்துக்கு ஒரு ரன் என்ற விகிதத்தில் தான் விளையாடுகிறார். எப்போதாவது 24 பந்துகளுக்கு 25 ரன்கள் எடுக்கிறார். மேலும் அவர் அதிக விக்கெட்களை வீழ்த்தி இருக்கிறார் என்பதையும் நான் மறுக்கவில்லை. ஆனாலும் எப்போதும் அவரது ரன் விகிதம் அதிகமானதாகவே இருக்கிறது. பெரும்பாலான போட்டிகளில் சராசரியாக ஓவருக்கு 6 ரன்களுக்கும் அதிகமாகவே அவரது எக்கனாமி இருக்கிறது”என்று தெரிவித்தார்.
“இந்திய ஆடுகளங்களில் மூன்றாவதாக பந்து வீசக்கூடிய பவுலரும் ஒரு பிரதான வேகப்பந்துவீச்சாளராக இருப்பது அவசியம் முதல் மாற்று பந்துவீச்சாளராக வரும் வீரரும் மணிக்கு 130-140 கிலோமீட்டர் வேகத்தில் வீசுபராக இருக்க வேண்டும். அப்போதுதான் டேட்டிங்க்கு சாதகமான சூழ்நிலைகளில் எதிரணியை கட்டுப்படுத்த முடியும்” என்று கூறி முடித்தார் பியூஸ் சாவ்லா. நடந்து முடிந்த முதல் ஒரு நாள் போட்டியில் சார்துல் தாக்கூர் 10 ஓவர்கள் பந்துவீசி 78 ரன்களை விட்டுக் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தவில்லை .

