தம்பி பும்ரா.. அந்த லெஜன்ட் வீரருக்கு நீங்க அப்படி பண்ணது ரொம்ப தப்பு.. மரியாதை வேணும்னா இத பண்ணவே கூடாது – மைக்கேல் ஹஸ்ஸி பேட்டி

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான 5 போட்டிகளைக் கொண்ட பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரின் முதல் 3 போட்டிகள் முடிவடைந்த நிலையில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றிருக்கிறது. மேலும் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது போட்டி டிராவில் முடிவடைந்தது. இதனால் இந்தத் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.

- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4வது டெஸ்ட் போட்டி வருகின்ற 26 ஆம் தேதி பாக்சிங் டே தினத்தில் நடைபெற இருக்கிறது. இதற்காக இந்திய அணி தீவிரமாக தயாராகி வருகிறது. இந்தத் தொடரில் இந்திய அணியின் துணை கேப்டன் ஜஸ்ப்ரீத் பும்ரா மிகச் சிறப்பாக பந்துவீசி இருக்கிறார். 3 டெஸ்ட் போட்டிகளில் 21 விக்கெட்டுகள் வீழ்த்தியிருக்கிறார் பும்ரா. மேலும் ஆஸ்திரேலியா மண்ணில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய இந்திய வேகப்பந்துவீச்சாளர் என்ற சாதனையையும் படைத்திருக்கிறார்.

- Advertisement -

இந்நிலையில் பும்ராவின் கிரிக்கெட் வாழ்க்கையின் தொடக்கத்தில் நடைபெற்ற ஒரு சம்பவம் குறித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் மைக்கேல் ஹஸ்ஸி பகிர்ந்துள்ளார். இது தொடர்பாக வில்லோ டாக் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய ஹஸ்ஸி அந்த சம்பவம் பும்ராவின் கிரிக்கெட் கேரியரில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்ததாகவும் தெரிவித்துள்ளார். இந்திய அணியின் நட்சத்திர பந்துவீச்சாளரான பும்ரா 2013 ஆம் வருடம் ஐபிஎல் தொடர் மூலம் அனைவராலும் அறியப்பட்டார்.

- Advertisement -

ரஞ்சி போட்டிகளில் குஜராத் அணிக்காக விளையாடி வந்த பும்ராவை மும்பை இந்தியன்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது. 2013 ஆம் வருட ஐபிஎல் தொடரில் சச்சின் டெண்டுல்கர், ரிக்கி பாண்டிங், மைக்கேல் ஹஸ்ஸி போன்ற கிரிக்கெட் லெஜன்ட் வீரர்களுடன் தனது ஐபிஎல் பயணத்தை தொடங்கினார் பும்ரா. மேலும் தனது முதல் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி விக்கெட்டையும் வீழ்த்தினார். தனது முதல் போட்டியிலேயே 23 ரன்களுக்கு 3 விக்கெட்டுகள் வீழ்த்தி அனைவரின் கவனத்தையும் தனது பக்கம் திருப்பினார் பும்ரா.

தற்போது சாந்தமாக இருக்கும் பும்ரா தனது கிரிக்கெட் கேரியரின் ஆரம்பத்தில் உணர்ச்சி மிகுந்த இளம் வீரராக காணப்பட்டார். மேலும் இந்தப் போட்டியின் போது தென்னாப்பிரிக்க அணியின் லெஜெண்ட் வீரரான ஏபி டிவில்லியர்ஸ் விக்கெட்டை வீழ்த்தினார். இதன்பிறகு அவரை ஸ்லெட்ஜ் செய்திருக்கிறார் பும்ரா. அப்போது குறிக்கிட்ட ஹஸ்ஸி, பும்ராவை அமைதி படுத்தியதாக தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இது தொடர்பாக பேசியிருக்கும் அவர், ” எல்லா வீரர்களை போன்றே பும்ராவும் தனது கிரிக்கெட் வாழ்க்கையின் துவக்கத்தில் மிகவும் ஆக்ரோஷமான வீரராக இருந்தார். மேலும் ஆர்சிபி அணியுடனான போட்டியின் போது ஏபி டிவில்லியர்ஸ் விக்கெட்டை வீழ்த்திய பும்ரா மிகவும் ஆக்ரோஷமாக தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். மேலும் அவரது வீக்கெட்டை வீழ்த்தி விட்டு ஸ்லெட்ஜிங் செய்தார்” என தெரிவித்தார்.

இது ஏபி டிவில்லியர்ஸை கோபமடையச் செய்தது. அப்போது குறுக்கிட்ட நான் பும்ராவிற்கு சில அறிவுரைகளை வழங்கினேன். மேலும் அவரிடம் சென்று உன்னிடம் நிறைய திறமை மற்றும் டேலண்ட் இருக்கிறது. அவரது விக்கெட்டை நீ கைப்பற்றி விட்டாய். அது போதும் அதுதான் உனது வெற்றி. ஒருவரது வீக்கெட்டை வீழ்த்துவதுதான் பந்துவீச்சாளரின் அதிகபட்ச ஸ்லெட்ஜிங்.

ஒருவரது விக்கெட்டை கைப்பற்றி விட்டோம் என்பதற்காக அதிகமாக ஆக்ரோசமாக நடந்து கொள்ள வேண்டும் என்று அர்த்தமில்லை. உனக்கு மரியாதை கிடைக்க வேண்டும் என்றால் நீயும் மரியாதையாக நடந்து கொள்ள வேண்டும். அதுதான் உன்னை உயர்த்தும் என்று பும்ராவிடம் தெரிவித்ததாக ஹஸ்ஸி அந்த நிகழ்ச்சியில் பகிர்ந்து கொண்டார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles