எதிர்பார்த்திருக்க மாட்டிங்க.. இவங்க தான் உலகக் கோப்பையை ஜெயிக்கப் போறாங்க.. பென் ஸ்டோக்ஸ் அதிரடி கணிப்பு.!

13 வது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவில் வைத்து நடைபெற்று வருகிறது. இந்த உலகக்கோப்பை போட்டி தொடரில் ஏழு போட்டிகளில் வெற்றி பெற்ற இந்தியா முதல் அணியாக உலகக்கோப்பை அரை இறுதிப் போட்டிகளுக்கு தகுதி பெற்றுள்ளது. இந்நிலையில் நடப்புச் சாம்பியன் இங்கிலாந்து அணி மிக மோசமான உலகக்கோப்பை சந்தித்து இருக்கிறது.

- Advertisement -

இதுவரை 6 போட்டிகளில் விளையாடியிருக்கும் இங்கிலாந்து பங்களாதேஷ் அணியுடன் மட்டும் ஒரு வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கிறது. இன்றைய போட்டியில் அந்த அணி ஆஸ்திரேலிய அணியை சந்திக்க இருக்கிறது. 2025 ஆம் வருடம் பாகிஸ்தானில் நடைபெற இருக்கும் சாம்பியன்ஸ் டிராபி போட்டிகளில் கலந்து கொள்ள இந்த உலகக் கோப்பை தொடரின் புள்ளிகள் பட்டியலில் முதல் எட்டு இடங்களுக்குள் இடம் பெற வேண்டும்.

- Advertisement -

அதனால் இங்கிலாந்து அணி மீதி இருக்கும் மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று முதல் எட்டு இடங்களுக்குள் இடம் பெற முயற்சி செய்யும். இந்நிலையில் இங்கிலாந்து அணியின் டெஸ்ட் கேப்டன் ஸ்டோக்ஸ் கடந்த ஆண்டு ஒரு நாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். ஆனால் இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் கேட்டுக் கொண்டதற்காக தனது ஓய்வை திரும்ப பெற்று இந்த உலகக்கோப்பை தொடரில் விளையாட வருகிறார். முதல் ஒரு சில போட்டிகளில் விளையாட வில்லை என்றாலும் தென்னாப்பிரிக்கா இலங்கை மற்றும் இந்திய அணிகளுடனான போட்டியில் அவர் விளையாடினார். எனினும் இலங்கை போட்டியை தவிர மற்ற இரண்டு ஆட்டங்களிலும் ஒற்றை இலக்கணங்களில் ஆட்டம் இழந்தார்

- Advertisement -

இந்நிலையில் இங்கிலாந்து அணியின் ஆஸ்திரேலியா போட்டிக்கு முன்பாக பத்திரிகையாளர்களை சந்தித்த அவர் உலக கோப்பையை வெல்ல வாய்ப்பு இருக்கும் இரண்டு அணிகள் பற்றிய தனது கருத்துக்கணிப்பை தெரிவித்திருக்கிறார். மேலும் இங்கிலாந்து அணியின் மோசமான உலகக் கோப்பை குறித்தும் ஒளிவு மறைவின்றி தனது கருத்தை தெரிவித்துள்ளார். இதுபோன்று ஒரு மோசமான உலகக்கோப்பையை கனவில் கூட நினைத்துப் பார்க்கவில்லை எனவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக பேசியிருக்கும் பென் ஸ்டோக்ஸ்” இந்த உலகக் கோப்பையில் நாங்கள் செய்த அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிவடைந்து இருக்கிறது. தொடக்கத்தில் நிகழ்ந்த ஒரு சில தோல்விகளினால் ஏற்பட்ட அழுத்தத்தில் இருந்து எங்களை மீட்டெடுக்க செய்த முயற்சிகள் எதுவும் பலனளிக்கவில்லை. இதற்கு முன்பும் இது போன்ற முயற்சிகள் செய்து வெற்றி பெற்றிருக்கிறோம். ஆனால் இந்த முறை எங்களது முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிவடைந்து இருக்கிறது. இந்த தோல்விகளை நாங்கள் மறைக்க விரும்பவில்லை. மிகவும் மோசமான ஆட்டத்தை இந்த உலகக் கோப்பையில் வெளிப்படுத்தி இருக்கிறோம் என்பதை ஏற்றுக் கொள்கிறேன்” என்று தெரிவித்தார் .

- Advertisement -

மேலும் தொடர்ந்து பேசிய அவர் ” பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியை தவிர வேறு எந்த போட்டிகளிலும் எங்களால் ஒரு முழு ஆட்டத்தை விளையாட முடியவில்லை. இது ஒரு மிகப்பெரும் தோல்வி. எனினும் மீதி இருக்கும் ஒன்று போட்டிகளிலும் வெற்றி பெற முயற்சி செய்வோம்” என்று தெரிவித்தார். இந்த உலகக் கோப்பையை வெல்ல வாய்ப்பு இருக்கும் அணி எது என்ற கேள்விக்கு பதில் அளித்த ஸ்டோக்ஸ் ” என்னிடம் உலக கோப்பையை வெல்லும் அணி குறித்து கணிக்கச் சொன்னால் இந்தியா சிறப்பாக விளையாடுகிறது. மேலும் தென்னாப்பிரிக்கா அணியும் இந்த உலகக் கோப்பையில் மிகச் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறது. அவர்கள் அதிரடியான ஆட்டத்தை ஆடுகிறார்கள். என்னைப் பொருத்தவரை சவுத் ஆப்பிரிக்கா அணி சிறப்பாக செயல்படுகிறது. அந்த அணிதான் உலகக்கோப்பையை வெல்லும் என்பது எனது கணிப்பு. இந்த பதிலை நீங்கள் எதிர்பார்த்து இருக்க மாட்டீர்கள்” எனக் கூறி முடித்தார்.

இந்திய அணி நாளை நடைபெற இருக்கும் தங்களது எட்டாவது போட்டியில் தென்னாப்பிரிக்க அணியை எதிர்த்து விளையாடி இருக்கிறது. இந்தப் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் வைத்து நடைபெற உள்ளது. இந்தப் போட்டியிலும் வெற்றி பெற்றால் லீக் சுற்றுகளின் முடிவில் இந்தியா புள்ளிகள் பட்டியலில் முதலிடம் வகிக்கும். மேலும் அரை இறுதிப் போட்டியில் நான்காவது இடத்தில் உள்ள அணியுடன் விளையாடும். தென்னாபிரிக்க அணி மீதி இருக்கும் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றால் அந்த அணி முதலிடத்திற்கு முன்னேறும்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles