“ஈசி பிட்சில மட்டும் நல்லா ஆட்ற இவரை யுவராஜ் கூட கம்பேர் பண்ணாதீங்க” – இந்திய வீரரை விமர்சித்த சஞ்சய் மஞ்சரேக்கர்.!

பதினாறாவது ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இலங்கை மற்றும் பாகிஸ்தானில் வைத்து நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற சூப்பர் போர் சுற்றின் மூன்றாவது போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் இந்தியா 147 ரன்களுக்கு இரண்டு விக்கெட் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டதால் போட்டியானது ரிசர்வ்னாலான இன்று ஒத்திவைக்கப்பட்டது.

- Advertisement -

இந்தப் போட்டியில் இந்தியாவின் துவக்க வீரர்கள் சிறப்பான அடித்தளம் அமைத்துக் கொடுக்க ரோகித் சர்மா மற்றும் கில் அரை சதம் எடுத்தனர். அதனைத் தொடர்ந்து விராட் கோலி 7 ரன்களிலும் கே எல் ராகுல் 17 ரன்களிலும் விளையாடிக் கொண்டிருந்தபோது மழை குறித்ததால் போட்டி நிறுத்தப்பட்டது.

- Advertisement -

மழையால் போட்டி தடைபட்டிருந்தபோது வர்ணனையாளர்களிடையே இந்தியாவின் சிறந்த ஆல்ரவுண்டர் பற்றிய விவாதம் நடைபெற்றது. அப்போது இந்திய அணியின் ஸ்டார் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவை வெகுவாக புகழ்ந்து பேசினார் பாகிஸ்தான் அணியின் ஜாம்பவான் வீரர் வக்கார் யூனுஸ். பாகிஸ்தான் அணியுடன் ஆன கடைசி போட்டியில் அவர் சிறப்பாக ஆடி 87 ரன்கள் எடுத்ததை சுட்டி காட்டினார் யூனுஸ்.

- Advertisement -

இது தொடர்பாக விரிவாக பேசிய வக்கார் யூனுஸ் ” இந்தியாவின் ஆல்ரவுண்டர்களான ஹர்திக் பாண்டியா மற்றும் ரவீந்திர ஜடேஜா இருவரும் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டு துறைகளிலும் சிறந்து விளங்குபவர்களாக இருக்கிறார்கள். குறிப்பாக ஹர்திக் பாண்டியாவை கடந்த பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியின் போது பாருங்கள். அதிரடி ஆட்டக்காரராக பெயர் பெற்ற அவர் ஸ்மார்ட் ஆகவும் விளையாடி அணியை இக்கட்டான சூழ்நிலையில் இருந்து மீட்டு கொண்டு வந்தார். ஆறாவது இடத்தில் அவர் போன்ற ஒரு அதிரடி ஆட்டக்காரரை எந்த அணியும் விரும்பும் என தெரிவித்தார்.

இதற்கு பதில் அளித்து பேசிய இந்தியாவின் முன்னாள் வீரரான சஞ்சய் மஞ்சரேக்கர் ” யுவராஜ் சிங் இந்தியாவின் சிறந்த வெள்ளை பந்து கிரிக்கெட் வீரர் என தெரிவித்தார். யுவராஜ் சிங் இந்திய அணிக்கு தனி ஆளாக பல போட்டிகளை வெற்றி பெற்று கொடுத்திருக்கிறார் என தெரிவித்த சஞ்சய் அவருடைய லெவலை யாரும் மேட்ச் செய்ய முடியாது எனக் கூறினார். ரவீந்திர ஜடேஜா மற்றும் கார்த்திக் பாண்டியா இருவரும் சிறந்த வீரர்கள் தான். ஆனால் யுவராஜ் சிங் வேற லெவல் என தெரிவித்தார்.

- Advertisement -

அப்போது பதிலளித்த யூனுஸ் கடந்த போட்டியில் ஹர்திக் பாண்டியாவின் பேட்டிங்கை பார்த்த பிறகும் அவர் எப்படி யுவராஜ் சிங் போன்ற ஒரு ஆல் ரவுண்டர் இல்லை என தெரிவிக்கிறீர்கள். நான் இருவரையும் ஒப்பீடு செய்யவில்லை ஆனால் ஹர்திக் பாண்டியா ஒரு சிறந்த ஆல் ரவுண்டர் தான் என தெரிவித்தார்.

இதற்கு பதில் அளித்த சஞ்சய் மஞ்சரேக்கர் ” நிச்சயமாக அவர் ஒரு சிறந்த பேட்டிங் ஆல் ரவுண்டர் என்று ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் அவரால் தொடர்ந்து 10 ஓவர்களை தொடர்ச்சியாக வீச முடியவில்லை. இந்த ஒரு காரணத்திற்காக நான் அவரை ஒரு பேட்டிங் ஆல் ரவுண்டனாகவே பார்க்கிறேன். ஜடேஜா மற்றும் பாண்டியா இருவரும் யுவராஜ் சிங்கின் பேட்டிங்கை என்றுமே மேட்ச் செய்ய முடியாது. ரவீந்திர ஜடேஜா பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களில் சிறப்பாக பந்து வீசக்கூடியவர் அதோடு சேர்த்து அவரது பேட்டிங்கும் வருகிறது. ஆனால் யுவராஜ் சிங் ஒரு மேட்ச் வின்னர் என தெரிவித்தார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles