அசால்ட்டா இருக்காதீங்க.. இந்திய அணிக்கு இவங்க 2 பேரும் பெரிய பிரச்சனை.. சவுரவ் கங்குலி எச்சரிக்கை பேச்சு.!

நடப்பு உலக கோப்பை தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் இந்திய அணி நடப்புச் சாம்பியன் இங்கிலாந்து எதிர்த்து லக்னோவில் விளையாட இருக்கிறது. இந்தியா 5 போட்டிகளில் ஐந்திலும் வெற்றி பெற்று 10 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. இங்கிலாந்து விளையாடியுள்ள ஐந்து போட்டிகளில் ஒரு வெற்றி மட்டுமே பெற்று இரண்டு புள்ளிகளுடன் கடைசி இடத்தில் இருக்கிறது.

- Advertisement -

மேலும் இந்த தொடரில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பாகிஸ்தான் அணியும் ஆறு போட்டிகள் விளையாடி உள்ள நிலையில் நான்கு தோல்விகளுடன் அரை இறுதி வாய்ப்பு கேள்விக்குறியாகி இருக்கிறது. இந்த உலகக் கோப்பைக்கு முன்பாக அனைவராலும் பெரிதும் எதிர்பார்க்கப்படாத சவுத் ஆப்பிரிக்கா அணி உலக கோப்பை தொடரில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது

- Advertisement -

மேலும் முதல் இரண்டு போட்டிகளில் இந்தியா மற்றும் சவுத் ஆப்பிரிக்கா நிகரிடம் தோல்வி அடைந்த ஆஸ்திரேலிய அணி தற்போது மீண்டும் அசுர பலத்துடன் வந்திருக்கிறது. அந்த அணி தொடர்ச்சியாக நான்கு போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் நான்காவது இடத்திற்கு முன்னேறி இருப்பதோடு அணியின் நெட் ரன் ரேட் சீர் செய்யப்பட்டிருக்கிறது. இதனால் 2023 ஆம் ஆண்டு உலகக் கோப்பையின் அரை இறுதிப் போட்டிகளுக்கான பந்தயம் சுவாரசியமாக தொடங்கியுள்ளது. எந்த அணியையும் எளிதாக எடுத்துக் கொள்ள முடியாத அளவிற்கு போட்டிகள் சுவாரசியமாக நடைபெற்று வருகின்றன.

- Advertisement -

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி இந்திய அணியை எச்சரிக்கை செய்திருக்கிறார். இந்திய அணி சிறப்பாக விளையாடி வந்தாலும் ஆஸ்திரேலியா மற்றும் சவுத் ஆப்பிரிக்கா அணிகள் இந்தியாவிற்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்திய அணி சிறப்பாக விளையாடுகிறது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் உலகக்கோப்பை வெற்றி பெறுவதற்கான தூரம் இன்னும் அதிகமாக இருக்கிறது. முதலில் அவர்கள் நாக் அவுட் என்ற தடையை தாண்ட வேண்டும் என தெரிவித்திருக்கிறார்.

ஆஸ்திரேலியா முதல் இரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்தாலும் அதனைத் தொடர்ந்து நடைபெற்ற நான்கு போட்டிகளில் வெற்றி பெற்று தாங்கள் யார் என்பதை நிரூபித்திருக்கிறது. அந்த அணி இந்தியாவிற்கு அரை இறுதிப் போட்டிகளில் மிகப்பெரிய சவாலாக இருக்கும். மேலும் தென்னாப்பிரிக்க அணியும் இந்த உலகக் கோப்பையில் புதிய பலத்துடன் விளையாடுகிறது. அவர்களது பேட்டிங் வரிசை மிரட்டலாக இருக்கிறது. இந்த இரண்டு அணிகள் இந்தியாவிற்கு நிச்சயம் சவாலை கொடுக்கும் என தெரிவித்தார். அதனால் இந்திய அணி ஒவ்வொரு போட்டியிலும் கவனத்துடன் விளையாட வேண்டும் எனவும் தெரிவித்தார் சவுரவ் கங்குலி.

- Advertisement -

இந்தியா மற்றும் சவுத் ஆப்பிரிக்கா அணிகள் மோத இருக்கின்ற போட்டி நவம்பர் ஐந்தாம் தேதி கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் வைத்து நடைபெற இருக்கிறது. இந்தப் போட்டிக்கான டிக்கெட் விற்பனை மிகவும் மும்முறமாக நடைபெற்று வருகிறது. இதுகுறித்து பேசிய சவுரவ் கங்குலி இந்தியப் போட்டி என்பதால் டிக்கெட்டிற்கு அதிக டிமாண்ட் இருக்கிறது. நல்லவேளை நான் பிசிசிஐ பிரசிடெண்ட் ஆக இருக்கவில்லை. அதனால் என்னிடம் யாரும் டிக்கெட் கேட்க மாட்டார்கள் என தெரிவித்தார் .

மேலும் நேற்று நடைபெற்ற பங்களாதேஷ் மற்றும் நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் அதிகமான பங்களாதேஷ் ரசிகர்கள் கொல்கத்தாவிற்கு வருகை புரிந்தது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்த அவர் பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு எதிரான போட்டியில் இன்னும் அதிகமான ரசிகர்கள் வருவார்கள் எனவும் தெரிவித்தார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles