பதிரான மலிங்காவை காப்பி அடிச்சாரா?.. உண்மைய தெரிஞ்சிட்டு பேசுங்க.. பதிரான கோச் பளீர்.!

இந்தியா பாகிஸ்தான் இலங்கை உட்பட ஆறு அணிகள் கலந்து கொள்ளும் ஆசிய கோப்பை போட்டிகள் பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் வைத்து நடைபெற்று வருகிறது. இதில் முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்ற நிலையில் இரண்டாவது போட்டியில் இலங்கை பங்களாதேஷ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

- Advertisement -

இந்தப் போட்டியில் அந்த அணியின் இளம் பேகப் பந்துவீச்சாளர் மதீஸா பத்திரனா அபாரமாக பந்து வீசி நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அந்தப் போட்டியில் 7.4 ஓவர்கள் வீசிய இவர் 32 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றி ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். ரசிகர்களால் குட்டி மலிங்கா என்று அழைக்கப்படும் இவர் கடந்த இரண்டு சீசன்களாக ஐபிஎல் தொடரிலும் சிஎஸ்கே அணியின் முன்னணி பந்துவீச்சாளராக விளங்கி வருகிறார்.

- Advertisement -

இவர் பந்து வீசும் சிலிங் ஸ்டைல் இலங்கை அணியின் லெஜெண்ட் லசித் மலிங்காவின் பந்துவீச்சு ஸ்டைலை ஒத்திருப்பதால் அவரைப் காப்பி அடித்து இவரும் அதே ஸ்டைலை பின்பற்றுகிறார் என்ற ஒரு பேச்சு கிரிக்கெட் விமர்சகர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது. இதற்கான விளக்கத்தை பந்து வீச்சு பயிற்சியாளர் தற்போது வெளியிட்டு இருக்கிறார்.

- Advertisement -

மதிசா பத்திரநாவின் இளம் வயது பயிற்சியாளர் ஆன பிலால் பசி டைம்ஸ் ஆப் நாளிதழுக்கு அளித்த பேட்டியில் “மதீஷா பதிரான இலங்கை அணியின் முன்னாள் வீரரான லஸிக் மலிங்காவின் பஞ்சு வீச்சு ஸ்டைலை பார்த்து அதேபோன்று பந்து வீசுவதாக பலரும் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் அவர் பயிற்சிக்கு வந்த முதல் நாளில் இருந்தே நேச்சுரலாகவே அவ்வாறு பந்து வீசினார். அவரது உடலில் ஏற்படும் அழுத்தத்தை குறைப்பதற்காக நாங்கள் ஒரு சில மாற்றங்களை மட்டும் செய்தோம்” என தெரிவித்து இருக்கிறார்.

மேலும் இது தொடர்பாக தொடர்ந்து பேசிய பிலால் மதீஷா பதிரான வேகமாக பந்து வீசுவது எனக்கே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அவரிடம் அந்த திறன் இயற்கையாகவே இருந்தது. அவர் எந்த அழுத்தத்திற்கும் உட்படுத்தி அதிகமாக பந்து வீச வேண்டிய கட்டாயம் அவருக்கு இருக்கவில்லை. நீங்கள் கூட பார்த்திருப்பீர்கள் ஐபிஎல் தொடரில் அவர் எவ்வளவு துல்லியமாக யார்கர் வீசினார் என்று . மேலும் அனைவரிடமும் நான் கேட்டுக் கொள்வது ஒன்றுதான் அவர் மீது அதிகமான எதிர்பார்ப்பு வைத்து அழுத்தத்தை கொடுக்காதீர்கள்”என தெரிவித்தார்.

- Advertisement -

கடந்த 2023 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் மதீஷா பதிரான 12 போட்டிகளில் விளையாடும் 19 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அவர் சிஎஸ்கே அணிக்காக இறுதி ஓவர்களில் கட்டுக்கோப்பாக பந்து வீசினார் என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். சிஎஸ்கே அணியின் கேப்டனான மகேந்திர சிங் தோனி இவரை மணிக்கு தேவைப்படும் இக்கட்டான நேரங்களில் பயன்படுத்தி இருந்தார் .

மதீஷா பதிரான ஒரு சிறந்த பந்துவீச்சாளர் ஆனால் அவரை மிகவும் கவனமாக இலங்கைக்கு கிரிக்கெட் கையாள வேண்டும் என தெரிவித்திருக்கிறார் அவரது சிறுவயது பயிற்சியாளர் பிலால். அவரது வித்தியாசமான சிலிங் ஆக்சன் காரணமாக அவருக்கு காயம் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 2023 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகளின் போது எம்எஸ் தோனியும் இதே கருத்தை வலியுறுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles