இந்திய அணியின் தலைசிறந்த பேட்ஸ்மேன் விராட் கோலி உடன் பாபர் அசாமை ஒப்பிடுவது மிகவும் நியாயமே இல்லாத செயல் என மீண்டும் தினேஷ் கார்த்திக் விமர்சனம் செய்திருக்கிறார். இந்திய அணிக்கு எதிரான போட்டியில் அக்சர் படேல் பந்துவீச்சில் பாபர் அசாம் மோசமான ஷாட் விளையாடி ஆட்டம் இழந்தார். மிக முக்கியமான போட்டியில் விராட் கோலி போல அவர் சீராக வெற்றி பெற்று தரக்கூடிய பெரிய வீரராக இல்லை. மேலும் அவருடைய பேட்டிங் ஃபார்ம் மிகவும் மோசமான முறையில் தொடர்ந்து இருந்து வருகிறது. குறிப்பாக டி20 கிரிக்கெட்டில் மிகவும் பலவீனமாக இருக்கிறார்.
ஆஸ்திரேலியா சென்று டி20 தொடரில் விளையாடிய பொழுது பாபர் அசாம் மிகவும் மெதுவாக விளையாடுகின்ற காரணத்தினால் உடன் விளையாடிய ஸ்மித் சிங்கிள் எடுக்காமல் அவரை நிறுத்தினார். அடுத்த தற்பொழுது அவருக்கு பேட்டிங் வரிசையில் பாகிஸ்தான் அணியில் நான்காவது இடம் கொடுக்கப்பட்டிருக்கிறது. சுழற் பந்துவீச்சுக்கு எதிராக ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்து விளையாடுவதற்கு பொறுப்பு ஒப்படைக்கப்பட்ட போதும் கூட அதை அவர் சரியாக செய்யவில்லை.
இது குறித்து தினேஷ் கார்த்திக் பேசும் பொழுது ” நீண்டகாலமாக விராட் கோலி உடன் பாபர் அசாமை ஒப்பிட்டு பேசி வருகிறார்கள். இது கொஞ்சமும் நியாயம் இல்லாத செயல். பாபர் அசாம் இந்தியாவுக்கு எதிரான கடைசிப் போட்டியில் சரண் அடைந்தது போல ஆட்டம் இழந்தார். விராட் கோலி அப்படி ஒரு ஷாட்டை போட்டியின் ஆரம்பத்தில் விளையாடி இருப்பார் என்று நான் கற்பனை கூட செய்ய மாட்டேன். தனது அணியை வெற்றி பெற வைக்க முடியும் என்ற நம்பிக்கை இல்லாமை இல்லையென்றால் எப்படி விளையாடி வெற்றி பெற வைக்க வேண்டும் என்று தெரியாததால் பாபர் அசாம் அப்படி விளையாடினார். இப்போது அபிஷேக் ஷர்மாதான் தலைசிறந்த வீரர்” என்று கூறியிருக்கிறார்.

