இது தெரியாம போச்சே.. ஷாகிப் ஹெல்மெட் கயிறை கடித்து கொண்டே பேட்டிங்.. யாருமே எதிர்பாராத காரணத்தை சொன்ன தினேஷ் கார்த்திக்

பங்களாதேஷ் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் போட்டிகள் மற்றும் டி20 தொடர்களில் விளையாட இருக்கிறது. 2 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டி தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் மூன்றாம் நாள் உணவு இடைவேளை வரை இந்திய அணி 432 ரன்கள் முன்னிலை பெற்று டெஸ்ட் தொடரில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

- Advertisement -

மேலும் நேற்றைய இரண்டாம் நாள் ஆட்டத்தின் போது பங்களாதேஷ் அணி 149 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. அந்த அணியின் அனுபவ வீரர் ஷகீப் அல் ஹசன் அதிகபட்சமாக 32 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இந்நிலையில் ஷகீப் அல் ஹசன் பேட்டிங் செய்ய வந்தபோது ஹெல்மெட்டின் ஸ்ட்ராப்புடன் இணைக்கப்பட்டிருந்த கயிறை கடித்துக் கொண்டே பேட்டிங் செய்தார். இது கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் வல்லுனர்கள் இடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

- Advertisement -

ஷகீப் அல் ஹசன் பேட்டிங் செய்யும்போது ஹெல்மெட்டின் கயிறை கடித்துக் கொண்டே ஏன் பேட்டிங் செய்கிறார்.?என சமூக வலைதளங்களிலும் பலரும் கேள்வி எழுப்பினர். மேலும் ஒவ்வொரு வீரருக்கும் கிரிக்கெட் விளையாட்டின் போது சில பழக்கவழக்கங்கள் இருக்கும். அதேபோன்று ஷகீப் அல் ஹசன் இந்த ஹெல்மெட்டின் கயிறை கடித்துக் கொண்டு பேட்டிங் செய்வதை வழக்கமாக கொண்டிருக்கலாம் என பலரும் கருத்து தெரிவித்து வந்தனர்.

- Advertisement -

இந்நிலையில் ஷகீப் அல் ஹசன் ஹெல்மெட் ஸ்ட்ராப்புடன் இணைக்கப்பட்டிருந்த கயிறை கடித்துக் கொண்டே பேட்டிங் செய்ததற்கான காரணத்தை இந்திய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பரும், வர்ணனையாளருமான தினேஷ் கார்த்திக் தெரிவித்தார். இது தொடர்பாக போட்டியின் நேரலையின் போது பேசிய அவர், ஷகீப் அல் ஹசன் பேட்டிங் செய்யும்போது தனது தலை ஆடாமல் சமமாக இருப்பதற்காக இந்த முறையை பின்பற்றுவதாக தெரிவித்தார்.

மேலும் இது தொடர்பாக தொடர்ந்து பேசிய தினேஷ் கார்த்திக், தன்னுடன் சக வர்ணனையாளராக பணியாற்றும் பங்களாதேஷ் அணியின் முன்னாள் கேப்டன் தமிம் இக்பால், ஷகீப் அல் ஹசன் ஹெல்மெட் கயிறை கடித்துக் கொண்டு பேட்டிங் செய்வதற்கான காரணத்தை தன்னிடம் கூறியதாக தெரிவித்தார். மேலும் இது குறித்து பேசிய தினேஷ் கார்த்திக், ஷகீப் இதனை ஒரு சுய பரிசோதனை மெக்கானிசமாக பயன்படுத்துவதாக கூறினார் .

- Advertisement -

பேட்டிங் செய்யும்போது அவரது நிலைப்பாடு மற்றும் ஷாட் அடிக்கும்போது அவரது தலை கால் பக்கம் சரியாமல் இருப்பதற்காக இந்த முறையை பின்பற்றுவதாக தெரிவித்திருக்கிறார். அவரது ஹெல்மெட்டில் கட்டப்பட்டிருக்கும் கயிறை கடித்துக் கொண்டிருக்கும் போது தலை சாய்வதால் ஏற்படுத்தும் அழுத்தம் தலை சாய்கிறது என்பதை அவருக்கு நினைவூட்டும். மேலும் இது பேட்டிங் செய்யும்போது சமநிலை மற்றும் கட்டுப்பாட்டை வழங்குகிறது எனவும் தெரிவித்திருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles