சிஎஸ்கே எதிரான தோல்விக்கு பின்.. ஓய்வை உறுதி செய்த ஆர்சிபி வீரர்.. ரசிகர்கள் கவலை

ஐபிஎல் தொடரின் 17 ஆவது சீசன் நேற்று முதல் தொடங்கியது. இந்த சீசனின் முதல் போட்டியில் நடப்புச் சாம்பியன் சிஎஸ்கே அணி ஆர்சிபி அணியுடன் மோதியது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் சிஎஸ்கே 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்று தனது கணக்கை தொடங்கியது.

- Advertisement -

முன்னதாக இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. துவக்கம் சிறப்பாக அமைந்தாலும் ஆர்சிபி அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. ஒரு கட்டத்தில் 78 ரன்களுக்கு 5 விக்கெட் இழந்து திணறியது ஆர்சிபி. அப்போது ஆர்சிபி அணியின் நம்பிக்கை நட்சத்திரம் தினேஷ் கார்த்திக் மற்றும் இளம் விக்கெட் கீப்பர் அனுஜ் ராவத் இருவரும் இணைந்து மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் .

- Advertisement -

அதிரடியாக விளையாடிய இந்த ஜோடி 6-வது விக்கெட்டுக்கு 50 பந்துகளில் 95 ரன்கள் சேர்த்தது. இவர்களது சிறப்பான ஆட்டத்தால் ஆர்சிபி அணி 173 ரன்களை எட்டியது. அதிரடியாக விளையாடிய அனுஜ் ராவத் 25 பந்துகளில் 3 சிக்ஸர்கள் மற்றும் 4 பவுண்டரிகளுடன் 48 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். கடந்த சீசனில் சுமாராக விளையாடிய தினேஷ் கார்த்திக் இந்த சீசனின் துவக்க போட்டியிலேயே ஆர்சிபி அணிக்கு மிகச் சிறப்பான ஃபினிஷிங்கை கொடுத்தார்.

- Advertisement -

கவுண்டர் அட்டாக் செய்து விளையாடிய அவர் 26 பந்துகளில் மூன்று பவுண்டரிகள் மற்றும் இரண்டு சிக்ஸருடன் 38 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். இவர்கள் இருவரும் ஆர்சிபி அணியை ஆரம்பகட்ட சரிவிலிருந்து மீட்டனர். எனினும் இந்த இலக்கு ஆர்சிபி அணியின் வெற்றிக்கு போதுமானதாக இல்லை. இரண்டாவது பேட்டிங்கில் சிறப்பாக விளையாடிய சிஎஸ்கே அணி 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி பெற்றது.

சிஎஸ்கே அணியின் அறிமுக வீரர் ரச்சின் ரவீந்தரா அந்த அணிக்கு சிறப்பான துவக்கத்தை அமைத்துக் கொடுத்தார். 15 பந்துகளில் 3 சிக்ஸர்கள் மற்றும் மூன்று பவுண்டரிகளுடன் 37 ரன்கள் எடுத்த அவர் ஆட்டம் இழந்தார். இவரைத் தொடர்ந்து ரஹானே மற்றும் டேரில் மிச்சல் ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தாலும் சிவம் தூபே மற்றும் ரவீந்திர ஜடேஜா இறுதியில் சிறப்பாக விளையாடி சிஎஸ்கே அணி வெற்றி பெற உதவினர்.

- Advertisement -

இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் சிறப்பாக விளையாடிய தினேஷ் கார்த்திக் இடம் இன்னிங்ஸ் பிரேக்கின் போது நேர்காணல் எடுக்கப்பட்டது. அப்போது பேசிய அவர் இந்த வருட ஐபிஎல் தொடர் தனக்கு கடைசி தொடராக இருக்கும் என தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக தொகுப்பாளரின் கேள்விக்கு பதில் அளித்த தினேஷ் கார்த்திக் இந்த வருட ஐபிஎல் தனக்கு கடைசி தொடராக இருக்கலாம் என்று நினைக்கிறேன். இந்த வருட ஐபிஎல் தொடருடன் நான் ஓய்வு பெறுவேன் என தெரிவித்து இருக்கிறார்.

மேலும் உங்களது ஹோம் கிரௌண்டான சேப்பாக்கம் மைதானத்தில் இதுதான் உங்களுக்கு கடைசி போட்டியா என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர் சேப்பாக்கம் மைதானம் பிளே ஆப் சுற்று போட்டிகளையும் நடத்தும். எனவே நாங்கள் ஐபிஎல் தொடரின் பல போட்டிகளிலும் வெற்றி பெற்று ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று மீண்டும் சேப்பாக்கத்தில் விளையாட விரும்புகிறேன். ஒருவேளை எங்கள் அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறவில்லை என்றால் இன்று நடைபெற்ற போட்டி தான் சேப்பாக்கத்தில் தனது கடைசி ஐபிஎல் போட்டியாக இருக்கும் என தினேஷ் கார்த்திக் தெரிவித்திருக்கிறார். இதன் மூலம் தினேஷ் கார்த்திக் இந்த வருட ஐபிஎல் தொடரோடு ஓய்வு பெற இருப்பது உறுதியாக இருக்கிறது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles