முதல் பாலை எதிர்கொள்வதற்கு முன்பு.. தோனி என்கிட்ட இததான் சொன்னாரு.. ரகசியத்தை உடைக்கும் சமீர் ரிஸ்வி

சென்னை அணி தனது இரண்டாவது போட்டியில் குஜராத் அணியை எதிர்கொண்டு 68 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருக்கிறது. தனது முதல் போட்டியில் களமிறங்கிய சமீர் ரிஸ்வி அதிரடி ஆட்டத்தின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

- Advertisement -

சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற இப்போட்டியில் ரச்சின் ரவீந்திர மற்றும் சிவம் துபேவின் அதிரடிக்கு பிறகு ரவிந்திர ஜடேஜா பேட்டிங் செய்ய களமிறங்க வேண்டிய நிலையில், இளம் வீரர் 20 வயதே ஆன சமீர் ரிஸ்வி களமிறங்கினார். அப்போது ரஷித் கான் இவருக்கு பந்து வீச தயாராக இருந்தார். டி20 கிரிக்கெட்டின் முன்னணி பந்துவீச்சாளரை எதிர்கொள்ளப் போகிறோம் என்ற சிறு பதட்டம் கூட அவரிடம் தென்படவில்லை.

- Advertisement -

முதல் பந்தை எதிர்கொண்ட ரிஸ்வி கண் இமைக்கும் நேரத்தில் டீப் ஸ்கொயர் லெக்கில் அட்டகாசமாக ஒரு சிக்சரை பறக்க விட்டார். சாதாரணமாக ஒரு வீரர் முதல் போட்டியில் முதல் பந்தினை எதிர்கொள்ளும் போது அதனை தடுத்தாடவே முயற்சி செய்வார். ஆனால் முன்னணி பந்துவீச்சாளர் ஒருவரது பந்தையே சிக்சருக்கு அடிப்பதெல்லாம் அரிதிலும் அரிது.

- Advertisement -

பின்னர் அதே ஓவரின் ஐந்தாவது பந்தில் டவுன் தி டிராக் இறங்கி வந்து லாங் ஆன் திசையில் ஒரு சிக்சரை பறக்க விட்டார். இந்த இரண்டு சிக்ஸர்களின் மூலம் தான் வாங்கப்பட்ட தொகைக்கு எவ்வளவு நியாயமானவன் என்பதை தெளிவுபடுத்தியுள்ளார். சாதாரணமாக சென்னை அணி ஒரு இளம் வீரருக்கு இவ்வளவு தொகை செலவு செய்யாது.

அதையும் மீறி ஒரு வீரருக்கு 8.40 கோடி வரைக்கும் செல்கிறது என்றால் அவரிடம் உள்ள திறமையை மட்டுமே பார்க்கும். முதல் போட்டியில் தன்னை வெளிப்படுத்தியுள்ள ரிஸ்வி இனி வரும் அடுத்தடுத்த போட்டிகளில் தனது அதிரடி வெளிப்படுத்துவார் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. போட்டிக்குப் பின்னர் பேசிய சமீர் தோனியை சந்திக்க வேண்டும் என்பது என் கனவு போட்டியில் களமிறங்குவதற்கு முன் தோனி கூறி ஆலோசனைகள் குறித்து கூறியிருக்கிறார். இது குறித்த அவர் கூறுகையில்

- Advertisement -

“தோனி பாய் என்னிடம் இதுவரை நீ எப்படி விளையாடினாயோ அதேபோல் விளையாடு. அதுதான் உன்னுடைய இயற்கையான ஆட்டம். இங்கு வித்தியாசமாக பார்ப்பதற்கு ஒன்றுமே இல்லை. திறமை ஒன்றுதான் ஆனால் மனநிலை மட்டும் சற்று வித்தியாசமாக இருக்கலாம். நீ எப்போது விளையாட்டினாலும் அழுத்தத்தை மட்டும் உணராதே. சூழ்நிலைக்கு தகுந்தாற் போல விளையாடினாலே அழுத்தமும் பதட்டமும் காணாமல் போய்விடும். அதனால் உன்னுடைய இயற்கையான ஆட்டத்தை வெளிப்படுத்து” என்று கூறினார்.

மேலும் தோனி குறித்து கூறிய அவர் தோனியை சந்திக்க வேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாள் கனவு அது தற்போது நிறைவேறி இருக்கிறது. அவரை சந்தித்தது மட்டுமில்லாமல் அவருடன் இணைந்து விளையாடுவது எனக்கு மிகவும் மகிழ்ச்சியை தருகிறது. அவரிடமிருந்து நான் நிறைய கற்றுக் கொள்கிறேன். பதட்டமான சூழ்நிலைகளில் இருந்து எப்படி முன்னேறி செல்ல வேண்டும் என வழி நடத்துகிறார் என்று கூறினார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles