ஐபிஎல் தொடரில் நாளை நடக்கவுள்ள ஆட்டத்தில் ராஜஸ்தான் அணியை எதிர்த்து சிஎஸ்கே விளையாடுகிறது. ஏற்கனவே ஆர்சிபி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சிஎஸ்கே படுதோல்வியை சந்தித்துள்ளது. இந்த பக்கம் ராஜஸ்தான் அணி இதுவரை விளையாடிய 2 போட்டிகளிலும் மோசமான தோல்வியை சந்தித்து இருக்கிறது.
2 பேரால் சிக்கல்
கவுகாத்தி மைதானத்தில் நடக்கவுள்ள போட்டி என்பதால் ரசிகர்களிடையே கூடுதல் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்த போட்டியில் சிஎஸ்கே அணி ராகுல் திரிப்பாட்டி மற்றும் தீபக் ஹூடா இருவரையும் நீக்க வேண்டும் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். ஏனென்றால் இதுவரை ஆடிய 2 போட்டிகளிலும் ஒற்றை இலக்கத்தில் இருவரும் ஆட்டமிழந்திருக்கிறார்கள்.
அதேபோல் 2023ம் ஆண்டு முதல் தீபக் ஹூடா ஆடியுள்ள 23 இன்னிங்ஸ்களில் 13 இன்னிங்ஸில் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்து வெளியேறி இருக்கிறார். அதேபோல் இருவருக்குமே ஷார்ட் பால் பிரச்சனைகள் இருக்கிறது. ராகுல் திரிப்பாட்டி மும்பை மற்றும் ஆர்சிபி அணியுடனான ஆட்டத்தில் ஷார்ட் பால் பந்துகளிலேயே ஆட்டமிழந்து இருக்கிறார்.
ராஜஸ்தான் பவுலிங்
தீபக் ஹூடாவுக்கு கிரிக்கெட் ஆடிய காலம் முதலே ஷார்ட் பால் பிரச்சனை இருப்பதை உலகமே அறியும். இந்த பக்கம் ராஜஸ்தான் அணியில் ஆர்ச்சர் மற்றும் துஷார் தேஷ்பாண்டே இருவருமே ஷார்ட் பால்களை அதிகமாக வீசக் கூடியவர்கள். இதனால் இவர்கள் இருவருடன் சிஎஸ்கே அணி களமிறங்கினால், நிச்சயம் மீண்டும் சிக்கலில் சிக்கும்.
கவுகாத்தி பிட்சிலும் கொஞ்சம் பந்து நின்று வரும் என்பதால், விஜய் சங்கர் மற்றும் கான்வே ஆகியோருடன் சிஎஸ்கே அணி களமிறங்குவது சரியாக இருக்கும். அதுமட்டுமல்லாமல் இதுவரை சிஎஸ்கே அணி ஆடியுள்ள 2 போட்டிகளிலும் ஜடேஜா ஒரு விக்கெட்டை கூட வீழ்த்தவில்லை. இந்த போட்டியில் ஜடேஜா விக்கெட் வீழ்த்தி கணக்கை தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

