19வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஆனது இன்னும் சில வாரங்களில் நடைபெற உள்ள நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த ஆண்டை விட இந்த முறை மிகவும் வலுவான முறையில் களம் இறங்க உள்ளது. பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டு துறைகளிலும் சரியான வீரர்களை வாங்க இருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த முறை கோப்பையை கைப்பற்றும் அணிகளில் ஒன்றாக கருதப்படுகிறது.
இந்த சூழ்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அங்கமாக இருந்த தீபக் சகார் கடந்த முறை நடைபெற்ற ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் வாங்க முடியாமல் போக மும்பை இந்தியன்ஸ் அணியால் வாங்கப்பட்டார். மேலும் சென்னை அணியில் தோனியிடம் அதிக நட்புறவாக இருக்கும் தீபக் சஹார் சென்னை அணியை மிஸ் செய்வது குறித்து சில விஷயங்களை பதிவு செய்து இருக்கிறார்.
இது குறித்து அவர் கூறும் போது “நான் நேற்று மகேந்திர சிங் தோனி பாய் இடம் பேசினேன். அப்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீடியோக்களை பார்த்தேன் அதில் உங்களை அதிகம் மிஸ் செய்கிறேன் உங்களை பார்க்க முடியவில்லை என்று கூறினேன். அதற்கு அவர் கிண்டலாக நான் உன்னை மிஸ் செய்யவில்லை என்று கூறினார். மேலும் நான் உங்களை சந்திக்க வருகிறேன் என்று கூறினேன். ஆனால் அதற்கு அவர் நீ என்னை சந்திக்கவே வர வேண்டாம் என்று கூறினார்” என்று பேசி இருக்கிறார் தீபக் சென்னை அணியில் விளையாடிக் கொண்டிருந்த போது அவரும் தோனியும் நகைச்சுவையாக செய்யும் வீடியோக்கள் வைரலாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

