விராட் கோலி இதை கண்டிப்பா செய்வார்.. இந்த விஷியத்தில் மட்டும் எனக்கு சந்தேகமே இல்லை – டேவிட் வார்னர் உறுதி

ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஒருநாள் தொடரை 2-1 என்ற நிலையில் இழந்த போதிலும், மூன்றாவது போட்டியில் ரோஹித் – கோலி இடையேயான பார்ட்னர்ஷிப் ரசிகர்கள் மனதில் சற்று தெம்பை ஊட்டியுள்ளது.

- Advertisement -

சீனியர் வீரர்களான ரோஹித் மற்றும் கோலி இருவரும், வயது மற்றும் ஃபிட்னஸ் காரணமாக 2027 உலகக் கோப்பையில் இருக்க மாட்டார்கள் எனவும், அவர்களை ஒதுக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளதாகவும் செய்திகள் அண்மையில் பரவின. ஆனால் அதைத் தவிடு பொடியாக்கும் வகையில் இருவரும் மீண்டு வந்துள்ளனர்.

- Advertisement -

ஒருபக்கம் ரோஹித் சர்மா 10 கிலோ பக்கம் உடல் இடையைக் குறைத்து இத்தொடரில் ஒரு அரை சதம் மற்றும் சதம் விளாசி தொடர் நாயகன் விருதையும் தட்டிச் சென்றார். மறுபக்கம் கோலி, பல நாட்கள் கிரிக்கெட்டில் இருந்து விலகியிருந்த கோலி முதல் 2 போட்டிகளில் டக் அவுட் ஆகி பெரிய ஏமாற்றம் அளித்தார்.

- Advertisement -

ஆனால் தான் யாரென்றதை உணர்ந்து, மூன்றாவது போட்டியில் ரோஹித்துடன் ஜோடி சேர்ந்து அற்புதமாக விளையாடினார். 81 பந்துகளில் 7 பவுண்ட்ரிகள் என 74* விளாசினார். இதனால் சரிந்த அவரது ஓடிஐ சராசரி மீண்டும் 50ஐக் கடந்தது. கோலி 2027 வரைத் தாக்குப்பிடிப்பாரா என்ற கேள்விகள் இனி சில நாட்கள் ஒலிக்காது.

இது பற்றி ஆஸ்திரேலியா வீரர் டேவிட் வார்னர் கூறியிருப்பதாவது, ” விராட் கோலிக்கு 2027 வரை ஆட வேண்டுமென்ற பசி மற்றும் இருந்தால், அவர் ஆடாமல் போவதற்கு ஒரு காரணமும் கிடைக்காது. இந்த விளையாட்டில் இன்னும் சிறந்த ஃபிட்னஸ் கொண்ட வீரர்களில் ஒருவராக அவர் இருக்கிறார். அவர் தொடர்ந்து விளையாடுவாரா இல்லையா என்பதைத் தாண்டி, தினமும் காலை எழுந்து பயிற்ச்சிக்கு செல்லும் ஆற்றலும், வெறியும் அவரிடம் உள்ளது. அதனால் என்னைக் கேட்டால், இப்படிபட்ட ஒருவர் 2027 வரை நிச்சயம் ஆடுவார் என்பதில் எனக்கு எந்தவித சந்தேகமும் இல்லை. ” எனக் கணீரென்ற பதிலைத் கொடுத்துள்ளார் டேவிட் வார்னர்.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles