உண்மைய சொல்றேன்.. எங்கள ஜெயிக்க வைத்த.. தமிழக வீரர் நடராஜனை எடுக்காத காரணம் இதுதான் – ஹைதராபாத் கோச் பேட்டி

உலக கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் தொடரின் மெகா ஏலம் சவுதி அரேபியாவில் வைத்து 23 மற்றும் 24 தேதிகளில் நடைபெற்றது. ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவதற்காக 1574 பேர் பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில் இந்தியா மற்றும் சர்வதேச வீரர்கள் உட்பட 182 பேர் ஐபிஎல் தொடருக்காக அணிகளால் வாங்கப்பட்டுள்ளனர். வழக்கம் போலவே பெரும்பாலான இளம் வீரர்களுக்கு ஐபிஎல் ஏலம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

- Advertisement -

இந்த ஐபிஎல் மெகா ஏலத்தில் நீண்ட நாட்களாக ஒரே அணிக்கு விளையாடி வந்த வீரர்கள் அந்த அணியால் ரிலீஸ் செய்யப்பட்டதால் ஏலத்தில் கலந்து கொண்டு மற்ற அணிகளுக்கு விளையாட வேண்டிய சூழலும் ஏற்பட்டிருக்கிறது. நீண்ட நாட்களாக மும்பை இந்தியன்ஸ் அணிக்கு விளையாடி வந்த இஷான் கிஷான் தற்போது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியால் 11.25 கோடிக்கு வாங்கப்பட்டிருக்கிறார். அதேபோன்று நீண்ட நாட்களாக ஹைதராபாத் அணிக்காக விளையாடிய தமிழக வீரர் நடராஜனை டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 10.75 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்துள்ளது.

- Advertisement -

நீண்ட நாட்களாக தங்களது அணிக்கு சாம்பியன் பந்துவீச்சாளராக விளங்கிய நடராஜனை ஏலத்தில் எடுக்க முடியாதது மிகப்பெரிய இழப்பு என சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தலைமை பயிற்சியாளர் டேனியல் வெட்டோரி தெரிவித்திருக்கிறார். முதல் நாள் ஏலத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர் நடராஜனை இழந்தது மிகப்பெரிய இழப்பு என குறிப்பிட்டார். மேலும் தமிழக வீரர் நடராஜனை ஏலத்தில் ஏன் வாங்க முடியவில்லை என்பதற்கான காரணத்தையும் அவர் தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -

இது தொடர்பாக பேசிய வெட்டோரி இந்த ஏலத்தில் நாங்கள் 8 வீரர்களை வாங்கி இருக்கிறோம். இந்திய வீரர்களான முகமது ஷமி, ஹர்சல் பட்டேல் மற்றும் இஷான் கிஷான் ஆகியோர் குறிப்பிடத்தக்க வீரர்கள் ஆவர். இந்த 3 வீரர்களையும் வாங்க வேண்டும் என்று நாங்கள் முன்பே திட்டமிட்டு இருந்தோம். மேலும் முகமது ஷமியை 10 கோடி ரூபாய்க்கு வாங்கினோம். ஹர்ஷல் பட்டேல் எங்களுக்கு 8 கோடி ரூபாய்க்கு கிடைத்தார். மேலும் இஷான் கிஷானை 11.25 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்திருக்கிறோம்.

கடந்த ஐபிஎல் தொடர்களில் மிகச் சிறப்பாக செயல்பட்டு வந்த இந்த 3 வீரர்களும் இவ்வளவு குறைவான தொகைக்கு கிடைப்பார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. இதனால் அந்த 3 வீரர்களையும் நாங்கள் வாங்கினோம். மேலும் அபிஷேக் ஷர்மா, பேட் கம்மின்ஸ், டிராவஸ் ஹெட், நிதிஷ் ரெட்டி மற்றும் ஹென்ரிச் கிளாஸன் ஆகிய வீரர்களை நாங்கள் தக்க வைத்திருந்ததால் எங்களது பர்ஸ் தொகையும் குறைவாகவே இருந்தது.

- Advertisement -

எனினும் நாங்கள் நடராஜனை எடுப்பதற்கு முயற்சி செய்தோம். ஆனாலும் நாங்கள் நிர்ணயித்த தொகையை விட அதிகம் சென்றதால் எங்களால் வாங்க முடியவில்லை. நடராஜன் இல்லாதது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு மிகப்பெரிய இழப்பு என்பதை ஏற்றுக் கொள்கிறேன். எங்கள் அணி நிர்வாகத்தால் முடிந்தவரை அவரை வாங்குவதற்கு முயற்சி செய்தோம். இதில் அதிர்ஷ்டம் எங்கள் பக்கம் இல்லை என சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தலைமை பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்.

2017 ஆம் வருடம் முதல் ஹைதராபாத் அணிக்காக ஐபிஎல் தொடர்களில் விளையாடி வந்த நடராஜன் இதுவரை 61 போட்டிகளில் விளையாடி 67 விக்கெட்டுகள் வீழ்த்தி இருக்கிறார். குறிப்பாக இந்த வருடம் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் மிகச் சிறப்பாக பந்து வீசிய நடராஜன் 14 போட்டிகளில் விளையாடி 19 விக்கெட்டுகள் வீழ்த்தி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுவதற்கு முக்கிய காரணமாக அமைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles