CWC புள்ளி பட்டியல்.. இங்கிலாந்தை வென்ற இந்தியா.. பாகிஸ்தான் அணிக்கு லக்.. காரணம் என்ன.? முழு விபரம்.!

தற்போது நடைபெற்று வரும் உலக கோப்பை போட்டியில் இந்திய அணி ஆறு போட்டிகளிலும் வெற்றி பெற்று 12 புள்ளிகளுடன் முதல் இடத்தில் இருக்கிறது. தென்னாப்பிரிக்கா 5 வெற்றிகள் உடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் 8 புள்ளிகள் உடன் மூன்றாவது மற்றும் நான்காவது இடங்களில் உள்ளன.

- Advertisement -

நேற்றைய போட்டியில் இந்திய அணி இங்கிலாந்து அணியை 100 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன் மூலம் இங்கிலாந்து அணியின் உலகக் கோப்பை அரை இறுதி வாய்ப்பு முற்றிலுமாக தகர்ந்து விட்டது என்றே கூறலாம். அந்த அணி இனி வரும் மூன்று போட்டிகளில் வெற்றி பெற்றாலும் 8 புள்ளிகள் மட்டுமே பெற முடியும். மேலும் நெட் ரன் ரேட் மிகவும் மோசமான நிலையில் இருக்கிறது. ஏதேனும் அதிசயம் நடந்தால் மட்டுமே இங்கிலாந்து அரை இறுதிக்கு தகுதி பெற முடியும்.

- Advertisement -

பங்களாதேஷ் அணியும் இந்த உலகக் கோப்பையில் அரை இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவதற்கான வாய்ப்புகளை இழந்து விட்டது. அந்த அணி சனிக்கிழமை நடைபெற்ற போட்டியில் நெதர்லாந்து அணியுடன் 87 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இதன் மூலம் இனி வரும் ஒன்று போட்டிகளில் வென்றாலும் பங்களாதேஷ் அணியால் உலக கோப்பையின் அரையிறுதி போட்டிக்கு செல்வது கடினமான ஒன்று.

- Advertisement -

இந்திய அணியின் வெற்றி ஒருவிதத்தில் பாகிஸ்தான் அணிக்கு அரை இறுதிப் போட்டிகளுக்கு செல்வதற்கான ஒரு வாய்ப்பை உருவாக்கி கொடுத்திருக்கிறது. தற்போது பாகிஸ்தான் நான்கு புள்ளிகள் உடன் உள்ளது. அந்த அணி நாளை நடைபெறும் போட்டியில் பங்களாதேஷ் அணியை எதிர்த்து கொல்கத்தாவில் வைத்து விளையாட இருக்கிறது. மேலும் நவம்பர் நான்காம் தேதி நியூசிலாந்து அணிக்கு எதிராக விளையாட இருக்கிறது பாகிஸ்தான். மேலும் இங்கிலாந்து அணியுடன் நவம்பர் 11ம் தேதி விளையாட இருக்கிறது.

பாகிஸ்தான் அணி தற்போது அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற அந்த அணி மீது இருக்கும் மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டும். மேலும் நியூசிலாந்து அணி இலங்கை மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுடனான போட்டியில் தோல்வி அடைய வேண்டும். இதன் மூலம் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து இரண்டு அணிகளும் 10 புள்ளிகள் பட்டிருக்கும். அப்போது ரன் ரேட் அடிப்படையில் அதிகம் உள்ள அணி அரை இறுதிக்கு முன்னேறும் .

- Advertisement -

பாகிஸ்தான் அணி அற இறுதிப் போட்டிக்கு முன்னேற வேண்டுமானால் நியூசிலாந்து அணியுடன் நவம்பர் நான்காம் தேதி நடைபெறும் போட்டியில் வெற்றி பெற வேண்டும். மேலும் நியூசிலாந்து அணி இலங்கை மற்றும் சவுத் ஆப்பிரிக்கா உடனான போட்டிகளில் தோல்வியடைய வேண்டும். இதன் மூலம் அந்த அணி 8 புள்ளிகளில் இருக்கும். பாகிஸ்தான் அணி தனக்கு மீது இருக்கும் ஒன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று 10 புள்ளிகளுடன் அரை இறுதிக்கு தகுதி பெறும்.

இந்தியா ஆஸ்திரேலியா மற்றும் சவுத் ஆப்பிரிக்காவை தவிர மற்ற எந்த அணிகளும் 10 புள்ளிகள் பெறவில்லை என்றால் பாகிஸ்தான் அணி மீது இருக்கும் ஒன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று அர இறுதிக்கு முன்னேற முடியும். மேலும் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் போன்ற அணிகளுக்கும் அரையிறுதிக்கு முன்னேறுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான போட்டி அந்த இரு அணிகளில் எந்த அணிக்கு அரை இறுதிக்கு முன்னேறும் வாய்ப்பு இருக்கிறது என்பதை முடிவு செய்யும். தற்போதைய புள்ளிகளின் அடிப்படையில் இந்தியா 12 புள்ளிகளுடன் முதல் இடத்தில் இருக்கிறது. தென்னாப்பிரிக்கா அணி 10 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் 8 புள்ளிகள் உடன் மூன்றாவது மற்றும் நான்காவது இடத்திலும் உள்ளன. இலங்கை பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகள் 4 புள்ளிகளுடன் ரன் ரேட் அடிப்படையில் ஐந்தாவது ஆறாவது ஏழாவது மற்றும் எட்டாவது இடத்தில் இருக்கின்றன. பங்களாதேஷ் மற்றும் இங்கிலாந்து அணிகள் ஒரு வெற்றியுடன் ஒன்பதாவது மற்றும் பத்தாவது இடத்தில் உள்ளது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles