CWC 2023: கோலி நவீன் பிரச்சனை.. பதில் அளித்த ஆப்கான் கேப்டன்.. நெகிழ்ச்சியில் இந்திய ரசிகர்கள்.!

13 வது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவில் வைத்து அக்டோபர் ஐந்தாம் தேதி முதல் துவங்கி நடைபெற்று வருகிறது. 48 போட்டிகளைக் கொண்ட இந்தத் தொடரின் இறுதி ஆட்டம் வருகின்ற நவம்பர் 19ஆம் தேதி அகமதாபாத்தில் வைத்து நடைபெற இருக்கிறது.

- Advertisement -

இதுவரை உலகக் கோப்பை தொடரில் ஏட்டு போட்டிகள் நடைபெற்று இருக்கின்றன. இதில் நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் தலா இரண்டு வெற்றிகள் உடன் முதல் இரண்டு இடங்களில் இருக்கிறது. இன்று நடைபெற இருக்கும் ஒன்பதாவது போட்டியில் இந்தியா ஆப்கானிஸ்தானை எதிர்த்து டெல்லியில் வைத்து விளையாட உள்ளது.

- Advertisement -

கடந்த எட்டாம் தேதி நடைபெற்ற ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று உலகக்கோப்பை கணக்கை வெற்றியுடன் துவங்கியிருக்கிறது. இதற்கு முன் 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி பரபரப்பாக முடிவடைந்தது. அந்தப் போட்டியில் ஒரு ஓவர்களுக்கு 16 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் முகமது சமி ஹேட்-ட்ரிக் விக்கெட் எடுத்து இந்திய அணியை வெற்றி பெறச் செய்தார்.

- Advertisement -

இந்நிலையில் ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் ஹஸ்துல்லாஹ் ஷஹீதி இந்தியா உடனான ஆப்கானிஸ்தான் நாட்டின் உறவு குறித்தும் இந்திய வீரர்கள் குறித்தும் மற்றும் விராட் கோலி நவீன் உல் ஹக் ஆகியோருக்கு இடையே ஐபிஎல் போட்டிகளில் ஏற்பட்ட வாக்குவாதம் குறித்தும் போட்டிக்கு முன்பான செய்தியாளர்கள் சந்திப்பில் மனம் திறந்து இருக்கிறார். இது குறித்து விரிவாக பேசியிருக்கும் அவர் இந்தியா எங்களது சொந்த வீடு எனவும் தெரிவித்திருக்கிறார்.

தங்கள் நாட்டில் கிரிக்கெட் விளையாடுவதற்கு ஏற்ற வசதிகள் இல்லாத காலங்களில் இந்தியா தான் எங்களுக்கு கிரிக்கெட் விளையாட உதவியது என தெரிவித்த அவர் எங்களது சொந்தப் போட்டிகள் அனைத்தும் இந்தியா மைதானங்களில் தான் நடைபெற்றன எனவும் தெரிவித்திருக்கிறார். இந்திய மக்களின் நீதானே எங்களது அன்பு என்றும் மாறாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் விராட் கோலி மற்றும் நவீன் உல் ஹக் ஆகியோருக்கு இடையே ஏற்பட்ட மோதல் குறித்து பேசிய அவர்” ஒரு போட்டியின் போது அந்தப் போட்டியின் சூழ்நிலை காரணமாக இரண்டு வீரர்களுக்கு இடையே மோதல் ஏற்படுவது இயல்பான ஒன்றுதான். அந்த மோதல் அந்த போட்டியோடு முடிந்து விடும்.

- Advertisement -

ஆப்கானிஸ்தான் அணியின் வீரர்கள் இந்திய வீரர்கள் மீது மிகுந்த மரியாதையும் மதிப்பும் வைத்திருக்கிறார்கள். மேலும் அவர்கள் பல இந்திய வீரர்களை தங்கள் ரோல் மாடலாகவும் ஏற்று விளையாடி வருகிறார்கள். சச்சின் டெண்டுல்கர் ராகுல் டிராவிட் முதல் தற்போது விராட் கோலி வரை இந்தியாவின் பல சிறந்த கிரிக்கெட் வீரர்கள் எங்கள் வீரர்களுக்கு ரோல் மாடல்களாக இருக்கிறார்கள் என தெரிவித்தார்.

மேலும் முதல் போட்டியில் தங்கள் அணி மோசமாக விளையாடி தோல்வி அடைந்திருந்தாலும் இனி வரும் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெற முயற்சி செய்வோம் எனவும் தெரிவித்தார். நடந்து முடிந்த ஐபிஎல் தொடரின் போது விராட் கோலி மற்றும் நவீன் உல் ஹக் ஆகியோருக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதன் காரணமாக இரண்டு வீரர்களுக்கும் 100% போட்டி கட்டணம் அபராதமாக விதிக்கப்பட்டது. இதன் பிறகு இவர்களது மோதல் சமூக வலைதளங்களிலும் தொடர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles