CWC 2023: இந்தியாவின் மாஸான உத்தேச பிளேயிங் XI.. ஆஸி எதிரான முதல் உலகக கோப்பை போட்டிக்கு தயார் நிலை.!

13-வது 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவில் வைத்து நடைபெற்று வருகிறது. இந்த உலகக்கோப்பை தொடரின் முதல் போட்டியில் நடப்புச் சாம்பியன் இங்கிலாந்தை ஒன்பது விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்து வீழ்த்தியது. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது போட்டியில் பாகிஸ்தான் அணி நெதர்லாந்து அணியை 81 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருக்கிறது.

- Advertisement -

இன்று நடைபெற்று வரும் மூன்றாவது போட்டியில் பங்களாதேஷ் அணி ஆப்கானிஸ்தானை எதிர்த்து விளையாடி வருகிறது. இதனைத் தொடர்ந்து நடைபெற இருக்கும் அடுத்த போட்டியில் இலங்கை மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் விளையாட இருக்கின்றன. உலகக்கோப்பையில் நாளை மதியம் நிச்சயமாக மைதானத்தில் வைத்து நடைபெற இருக்கும் போட்டியில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா உடன் விளையாட இருக்கிறது.

- Advertisement -

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற ஆஸ்திரேலியா அணியுடன் மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி இருப்பது இந்தியா அணிக்கு சற்று பலமாக அமைந்திருக்கிறது. மேலும் இந்தப் போட்டி சென்னையில் நடைபெறுவதால் ஆடுகளம் சுழற்சிக்கு சாதகமாக இருக்கும். இதுவும் இந்திய அணிக்கு ஒரு கூடுதல் பலமாகும்.

- Advertisement -

நாளை நடைபெற இருக்கும் போட்டியில் களம் இறங்கக்கூடிய இந்தியாவின் உத்தேச அணியை பற்றி பார்ப்போம். கடந்த சில தொடர்களாக இந்தியாவிற்கு சிறப்பாக விளையாடி வந்த சுப்மன் கில் டெங்கு காய்ச்சலால் அவதிப்பட்டு வருவதால் நாளை நடைபெற இருக்கும் போட்டியில் அவர் பங்கேற்பது சந்தேகமாக இருக்கிறது. இதனால் அவருக்கு பதிலாக இஷான் கிஷான் தொடக்க வீரராக களம் இறக்கப்படலாம், அல்லது கேஎல் ராகுலை தொடக்க வீரராக விளையாட வைத்து சமீபகாலமாக சிறப்பாக செயல்பட்டு வரும் சூரியகுமார் யாதவ் ஆறாவது இடத்தில் களம் இறக்கப்படலாம்.

எனினும் கே எல் ராகுல் விக்கெட் கீப்பராகவும் செயல்பட்டு வருவதால் அவர் ஐந்தாவது இடத்தில் களம் இறங்கவே வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. மேலும் ஆடுகளம் சுழற்சிக்கு சாதகமாக இருக்கும் என்பதால் இந்திய அணி ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோருடன் களம் இறங்கும். மேலும் ஆல்ரவுண்டர்களாக ஹர்திக் பாண்டியா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் விளையாடுவார்கள். வேகப்பந்துவீச்சாளர்களாக ஜஸ்பிரீத் பும்ரா விளையாடுவார். மற்றொரு வேகப்பந்துவீச்சாளர்களில் முகமது சமி அல்லது முகமது சிராஜ் களம் இறக்கப்படலாம். மேலும் சமீபத்தில் இருக்கும் பார்மை வைத்து பார்க்கும் போது முகமது சிராஜ் விளையாடவே அதிக வாய்ப்புகள் இருக்கிறது.

- Advertisement -

இந்திய அணிக்கு துவக்க வீரர்களாக ரோகித் சர்மா மற்றும் இசான் கிசான் விளையாடுவார்கள். அவர்களைத் தொடர்ந்து மூன்றாவது வீரராக விராட் கோலியும் நான்காவது இடத்தில் ஸ்ரேயாஸ் ஐயரும் விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐந்தாவது இடத்தில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் கேஎல் ராகுல் ஆறாவது மற்றும் ஏழாவது இடத்தில் ஆல் கவுண்டர்களான ஹர்திக் பாண்டியா மற்றும் ரவீந்திர ஜடேஜா விளையாட வாய்ப்பு இருக்கிறது. எட்டாவது மற்றும் ஒன்பதாவது இடங்களில் சுழற் பகுதி வீச்சாளர்களான ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் குல்தீப் யாதவ் இருவரும் களம் இறக்கப்படலாம். பத்தாவது வீரராக ஜஸ்பிரீத் பும்ராவும் பதினொன்றாவது வீரராக முகமது சிராஜ் தேர்வு செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உலகக்கோப்பையின் முதல் போட்டியில் இந்தியாவின் உத்தேச பிளேயிங் XI::

ரோகித் சர்மா (கேப்டன்)
இஷான் கிஷான்
விராட் கோலி
ஸ்ரேயாஸ் ஐயர்
கேஎல் ராகுல் (விக்கெட்கீப்பர்)
ஹர்திக் பாண்டியா
ரவீந்திர ஜடேஜா
ரவிச்சந்திரன் அஸ்வின்
குல்தீப் யாதவ்
ஜஸ்ப்ரீத் பும்ரா
முகமது சிராஜ் / முகமது சமி

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles