CWC 2023.. 2 ரன் 3 விக்கெட்.. ராகுல் கோலி அசத்தல்.. ஒற்றை கேட்ச் மிஸ்ஸால் மேட்சை விட்ட ஆஸ்திரேலியா.. இந்தியா அபாரம்.!

தற்போது நடைபெற்று வரும் 13 வது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் இன்று ஐந்தாவது போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வைத்து மோதின. ரசிகர்களின் பலத்த கரகோஷங்களுக்கு இடையே தொடங்கிய இந்த போட்டியில் ஆஸ்திரேலியா டாஸ் வென்றது.

- Advertisement -

போட்டி செல்லச் செல்ல ஆடுகளம் மெதுவாக திரும்பும் என்பதால் ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் பேட் கம்பெனிஸ் பேட்டிங் தேர்வு செய்தார். இதனைத் தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் துவக்க வீரர் மார்ஸ் ரன் எதுவும் எடுக்காமல் பும்ரா பந்தில் விராட் கோலி இடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். இதனைத் தொடர்ந்து ஸ்மித் மற்றும் வார்னர் இருவரும் இணைந்து சிறப்பாக விளையாடினர். அணியின் ஸ்கோர் 74 ஆக இருந்தபோது 41 ரன்கள் எடுத்திருந்த வார்னர் குல்திபியாதவ் சுழலில் ஆட்டம் இழந்தார்..

- Advertisement -

இதனைத் தொடர்ந்து ஸ்டீவன் ஸ்மித் 48 ரன்களிலும் லபுசேன் 27 ரன்களிலும் அலெக்ஸ் கேரி ரன் எதுவும் எடுக்காமலும் ரவீந்திரன் ஜடேஜா பந்துவீச்சில் ஆட்டம் இழக்க ஆஸ்திரேலியா அணி தடுமாற்றத்தை சந்தித்தது. மேலும் ரவிச்சந்திரன் அஸ்வின் பந்துவீச்சில் கிரீன் எட்டு ரன்களிலும் அவுட் ஆனபோது 140 ரன்களுக்கு ஏழு விக்கெட்டுகளை இழந்து பெரும் பின்னடைவை சந்தித்திருந்தது. இறுதியில் மிச்சல் ஸ்டார்க் மற்றும் கம்மின்ஸ் இருவரும் இணைந்து ஆஸ்திரேலியா அணி 19 ரன்கள் எடுக்க உதவினர். கம்மின்ஸ் 15 ரன்களிலும் ஸ்டார்க் 28 ரன்களிலும் ஆட்டம் இழந்தனர்.

- Advertisement -

இந்திய அணியின் பந்துவீச்சில் ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்டுகளும் ஜஸ்ப்ரீத் பும்ரா மற்றும் குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். முகமது சிராஜ் ஹர்திக் பாண்டியா மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் தலா 1 விக்கெட் கைப்பற்றினர். இதனைத் தொடர்ந்து 200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆட வந்த இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. இந்திய அணியின் துவக்க வீரர் இசான் கிஷான் ரன் எதுவும் எடுக்காமல் ஸ்டார் பந்துவீச்சில் வெளியேறினார். இவரைத் தொடர்ந்து கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோரும் ரன் எடுக்காமல் ஹேசல்வுட் பந்துவீச்சில் வெளியேற இந்திய அணி இரண்டு ரன்கள் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இதனால் இந்தியா வெற்றி பெறுமா என்ற சந்தேகம் ரசிகர்களுக்கு ஏற்பட்டது. அப்போதே நான்காவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த விராட் கோலி மற்றும் கேஎல் ராகுல் இருவரும் சிறப்பாக ஆடி இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். இவர்கள் இருவரும் நான்காவது விக்கெட் இருக்கு ஜோடியாக 165 ரன்கள் சேர்த்தனர். சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் விராட் கோலி 116 பந்துகளில் ஆறு பவுண்டரிகளுடன் 85 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இவரது விக்கெட்டுக்கு பிறகு ஜோடி சேர்ந்த கேஎல் ராகுல் மற்றும் ஹர்திக் பாண்டியா இருவரும் இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்.

- Advertisement -

இந்திய அணி 41.2 ஓவர்களில் 201 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. கே எல் ராகுல் 115 பந்துகளில் 8 பவுண்டரிகள் மற்றும் இரண்டு சிக்ஸர்களுடன் 97 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். ஹர்திக் பாண்டியா 8 பந்துகளில் 11 ரன்கள் உடன் களத்தில் இருந்தார். இதன் மூலம் இந்திய அணி தனது முதல் உலகக் கோப்பை போட்டியில் நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி வெற்றியை பதிவு செய்திருக்கிறது. மேலும் 36 ஆண்டுகளுக்கு முன்பு சேப்பாக்கம் மைதானத்தில் ஆஸ்திரேலியா அணியுடன் ஏற்பட்ட தோல்விக்கு பலி தீர்த்திருக்கிறது. விராட் கோலி 12 ரன்கள் இருந்தபோதே அவர் கொடுத்த கேட்சை ஆஸ்திரேலிய வீரர் மார்ஸ் தவற விட்டார். இதுதான் இந்த போட்டியில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது .

இந்திய அணி தனது இரண்டாவது போட்டியில் வருகின்ற 11ம் தேதி ஆப்கானிஸ்தான் அணிகள் டெல்லியில் வைத்து விளையாட உள்ளது. அதனைத் தொடர்ந்து அக்டோபர் 14ஆம் தேதி நடைபெற இருக்கும் போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக அகமதாபாத்தில் வைத்து விளையாட இருக்கிறது. ஆஸ்திரேலியா வருகின்ற 12-ம் தேதி தென்னாபிரிக்க அணிக்கு எதிராகவும் 16-ம் தேதி இலங்கை அணிக்கு எதிராகவும் லக்னோவில் வைத்து விளையாட உள்ளது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles