சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ரியான் பராக் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். முதலில் விளையாடிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி அதிரடியாக ஆடி 286 ரன்களை குவித்தது. 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து இந்த ஸ்கோரை எட்டியது ஹைதராபாத் அணி. 287 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் ராஜஸ்தான் விளையாடியது.
ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக சஞ்சு சாம்சன், யஷஸ்வி ஆகியோர் களமிறங்கினர். ஆனால், யஷஸ்வி 1 ரன்னில் நடையைக் கட்டினார். சாம்சன் மட்டும் நின்று விளையாடி 66 ரன்கள் எடுத்தார்.
கேப்டன் ரியான் பராக் 4 ரன்னில் நடையைக் கட்டினார். அடுத்து வந்த நிதிஷ் ராணாவும் 11 ரன்னில் அவுட்டானார். விக்கெட் கீப்பர் துருவ் ஜூரல் அதிரடியாக விளையாடி 70 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். அடுத்து ஜோடி சேர்ந்த சுபம் தூபே, ஷிம்ரன் ஹெட்மயர் சிக்ஸர்களை பறக்கவிட்டு அதிரடி காட்டினர். ஆனால் இது வெற்றி க்கு போதுமானதாக அமைய வில்லை. முடிவில் 44 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி வெற்றி பெற்றது.
போட்டிக்கு பிறகு ஹைதராபாத் அணியின் கேப்டன் பேசும் போது “எங்கள் பசங்களுக்கு பந்து வீச எனக்கு விருப்பமில்லை. நம்பவே முடியல. அது பயமா இருந்துச்சு. பவுலர்களுக்கு இது கஷ்டமா இருக்கும்னு உங்களுக்குத் தெரியும், ஆனா இவ்வளவு பெரிய ஸ்கோர் இருக்கும்போது, ஒரு ஓவர் பவுலிங் அணிக்கு வெற்றியைத் தேடித் தரும். நீங்க ரன் எடுக்கப் போறீங்க, ஆனா அடுத்த ஓவரை ஆதரிப்பது, புதுசா ஆரம்பிப்பது, அப்புறம் வித்தியாசத்தை ஏற்படுத்துறது முக்கியம். அணியின் ஒற்றுமையை எங்களால் ஒன்றாக வைத்திருக்க முடிந்தது” என்றார்.
மேலும் அவர் ” பேட்டிங் ல் நாங்கள் ரெண்டு பேரை ஆரம்பத்தில் இழக்க அவங்களுக்குப் பதிலா நாம் யாரை பயன்படுத்தினோம் என்று நினைக்கும் போது ரொம்ப சந்தோஷமா இருக்கு, இன்னைக்கு இஷான் நம்பமுடியாத அளவுக்கு விளையாண்டார். நான் சுதந்திரமா விளையாட முயற்சி பண்றேன், அதை தொடர்ந்து அனுபவிக்க முயற்சி பண்றேன். எங்கள் அணியின் தயாரிப்பு அற்புதமா இருந்தது. எங்கள் பயிற்சியாளர்கள் அருமையா இருந்தாங்க, அவங்க 3-4 வாரமா இங்க இருக்காங்க. எல்லாரும் ரொம்ப ஃபிட்டா இருக்காங்க, ஷூட் பண்றாங்க, அவங்களை சுதந்திரமா விளையாட ஊக்குவிப்போம். சொல்றதுக்கு ரொம்ப சுலபம், ஆனா இந்த வருஷம் முழுக்க எப்படி விளையாடணும்னு ஒரு ப்ளூபிரிண்ட் வச்சிருக்கோம்” என்று கூறினார்.

