சிஎஸ்கே அணிக்கு வரும் சஞ்சு சாம்சன்.. 2 வீரர்களை கேட்கும் ராஜஸ்தான் ராயல்ஸ்.. யார் அந்த 2 வீரர்கள்.. பாவம் அஸ்வின்

18வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ஆர்சிபி அணி முதல்முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இந்த சீசனில் சிஎஸ்கே அணி கடைசி இடத்தை பிடித்தது. சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் கை விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக 5 போட்டிகளோடு விலகினார். இதன்பின் தோனி கேப்டனாக பொறுப்பேற்ற போதும் சிஎஸ்கே அணியால் கம்பேக் கொடுக்க முடியவில்லை.

- Advertisement -

சிஎஸ்கே பேச்சுவார்த்தை

கடைசி நேரத்தில் டிவால்ட் பிரெவிஸ், உர்வில் படேல், ஆயுஷ் மாத்ரே உள்ளிட்டோரின் வருகையால் ஒரு சில வெற்றிகளை பெற்றது. அடுத்த சீசனில் ருதுராஜ் கெய்க்வாட் திரும்ப வந்தாலும், மிடில் ஆர்டரில் சில ஓட்டைகளை அடைக்க வேண்டிய தேவை சிஎஸ்கே அணிக்கு இருக்கிறது. இந்த சூழலில் சிஎஸ்கே மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையில் டிரேட் பேச்சுவார்த்தை தொடங்கிவிட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

- Advertisement -

ராஜஸ்தான் அணியிலும் கேப்டன்சி விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது. சஞ்சு சாம்சனை சிஎஸ்கே அணி பெற விரும்புவதாக கூறப்பட்டு வந்தது. அதற்கேற்ப அமெரிக்காவில் நடந்த எம்எல்சி தொடரில் ஜேஎஸ்கே போட்டியை காண வந்திருந்தார். அப்போது அவருடன் சில சிஎஸ்கே நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தியதாக சொல்லப்படுகிறது.

- Advertisement -

2 வீரர்கள்

இதனிடையே அஸ்வினின் யூடியூப் சேனலில் வரும் பி டாக், சிஎஸ்கே – ராஜஸ்தான் இடையிலான டிரேட் பேச்சுவார்த்தைகள் தொடங்கிவிட்டது. சிஎஸ்கே அணியின் மிடில் ஆர்டர் இடதுகை பேட்ஸ்மேன், ஒரு ஆஃப் ஸ்பின்னரை பெற ராஜஸ்தான் அணி விருப்பம் தெரிவித்திருக்கிறது என்று பதிவிட்டுள்ளார். இதனால் சிஎஸ்கே அணி என்ன முடிவு எடுக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

சஞ்சு சாம்சன் நீண்ட காலமாகவே சிஎஸ்கே அணிக்காக விளையாட வேண்டும் என்ற ஆசையை வெளிப்படுத்தி இருக்கிறார். அதேபோல் தோனியின் இடத்தை சஞ்சு சாம்சனை வைத்து எளிதாக நிரப்ப முடியும். இதனால் சிஎஸ்கே அணி சிவம் துபே மற்றும் ஸ்ரேயாஸ் கோபால் ஆகியோரை கொடுத்துவிட்டு, எளிதாக சஞ்சு சாம்சனை பெற்று கொள்ளும் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles