நேற்று முன் தினம் நடைபெற்ற முடிந்த ஐபிஎல் மினி ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கார்த்திக் சர்மா மற்றும் பிரசாந்த் வீர் என்கிற இரண்டு வீரர்களை தலா 14.20 கோடிக்கு வாங்கி அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. இந்த சூழ்நிலையில் இதற்கான அவசியத்தை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளம்மிங் வெளிப்படுத்துகிறார்.
ரவீந்திர ஜடேஜா ஏற்கனவே ராஜஸ்தான் அணிக்கு விளையாட உள்ள நிலையில், அதற்கு பதிலாக பிரசாந்த் வீர் என்கிற இளம் ஆல் ரவுண்டரை எடுத்த சிஎஸ்கே கார்த்திக் ஷர்மாவை வாங்கி இதன் மூலமாக எம்எஸ் தோனி கிட்டத்தட்ட விளையாடாமல் இருப்பதை சிஎஸ்கே உறுதி செய்கிறது. மேலும் டோனி இம்பாக்ட் ப்ளேயராக மட்டுமே களமிறங்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக கருதப்படுகிறது.
இதுகுறித்து பிளமிங் கூறும்போது “நாங்கள் எங்களுடைய தொடக்க பேட்டிங் வரிசையில் வலிமையாக இருக்க வேண்டும் என்று உணர்ந்தோம். அதேபோல எம் எஸ் தோனியும் விரைவாக ஓய்வு பெற்று விடுவார் என்று எங்களுக்கு தெரியும். சஞ்சு சாம்சன் ஒரு தரமான வீரர். மேலும் இது அணியை ஊக்கப்படுத்துவதற்கான ஒரு திட்டமிடல். மேலும் இரண்டு ஆண்டுகள் அல்லது அடுத்த ஆறு ஆண்டுகளில் சிஎஸ்கே எப்படி இருக்கும் என்கிற திட்டத்தை பற்றியது” என்று பிளமிங் பேசி இருக்கிறார்.

