2024ஆம் ஆண்டு நடக்கும் ஐபில் தொடரில் சென்னை அணி வீரர் அம்பத்தி ராயுடு ஓய்வு பெறுவதைத் தொடர்ந்து, அவருக்கு பதில் மாற்று வீரர் குறித்த கேள்விக்கு சிஸ்கே அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் பதிலளித்துள்ளார்.
அடுத்த ஆண்டு மார்ச் மாதம் ஐபில் தொடர் நடைபெற உள்ள நிலையில் 10 அணிகளும் தங்களுக்கான வீரர்களைத் தேர்வு செய்வதில் கலந்தாலோசித்து வருகிறது. டிரேடிங் முறையிலும் வீரர்கள் மாற்றம் செய்யப்பட்டும் வருகின்றனர்.
இந்நிலையில் நடப்பு சாம்பியன் சிஸ்கே அணியின் நட்சத்திர வீரர் அம்பத்தி ராயுடு கடந்த சீசனோடு ஓய்வு பெற்றார். தற்போது 37 வயதாகும் அவர் 2010ஆம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் உடன் தனது ஐபிஎல் வாழ்க்கையைத் தொடங்கினார். 2013ஆம் ஆண்டு அவர் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது.
2018 ஆம் ஆண்டு சிஎஸ்கே அணிக்கு வருவதற்கு முன்பு 2015 மற்றும் 2017ல் மும்பை இந்தியன்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது. அதில் தனது சிறப்பான பங்களிப்பை அம்பத்தி ராயுடு வழங்கினார். மேலும் சென்னை அணியில் மிடில் ஆர்டரில் தனது நிலையான பேட்டிங் பங்களிப்பைத் தொடர்ந்து வழங்கினார். அவரது பங்களிப்பு சிஎஸ்கே அணி மகத்தான வெற்றிகளை பெற்று ஐபிஎல் கோப்பைகளை 2018,2021,2023ல் பெற்றுத்தர உதவியது.
இந்நிலையில் அவரது ஓய்வு சிஎஸ்கே அணிக்கு பின்னடைவாகக் கருதப்படுகிறது. அவருக்கான மாற்று வீரரைத் தேடும் முயற்சியில் அணி நிர்வாகம் ஆலோசித்து வருகிறது. இந்நிலையில் சிஸ்கே அணியின் தலைவர் காசி விஸ்வநாதன் இது குறித்து கூறியதாவது :
” சிஎஸ்கே அணிக்கு அம்பத்தி ராயுடுவின் பங்களிப்பு மிகச் சிறப்பானது. அவருக்கு சரியான மாற்றுவீரரை தேடி வருகிறோம்.
பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க் மற்றும் டிராவிஸ் ஹெட் போன்ற சில ஆஸ்திரேலிய வீரர்கள் மீண்டும் ஐபிஎல்-க்கு வருகிறார்கள் என்று கேள்விப்பட்டதால் இது ஒரு நல்ல ஏலமாக இருக்கும். ஒரு சுவாரஸ்யமான ஏலமாக இருக்கும்,” என்று விஷநாதன் மேலும் கூறினார்.
மிட்செல் ஸ்டார்க் கடந்த சில வருடங்களாக ஆஷஸ் மற்றும் உலக கோப்பை தொடருக்காக ஐபில் தொடரை புறக்கணித்தார். டிராவிஸ் ஹெட் இந்த உலக கோப்பையில் மிகச் சிறப்பான பங்களிப்பை ஆஸ்திரேலிய அணிக்கு வழங்கினார். எனவே இவர்களது வருகையும் ஐபில் தொடரை ரசிகர்களிடேயே எதிர்பார்ப்பைக் கூட்டியுள்ளது.

