எங்களின் பலமே சுழற்பந்துவீச்சு தான்.. இது தான் எங்கள் வெற்றியின் ரகசியம் – சென்னை அணியின் கேப்டன் பேச்சு

கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்த சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதும் ஐபிஎல் போட்டி இன்று சென்னை மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் சென்னை அணி முதலில் பந்துவீச, சென்னை அணியின் சுழற்பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் மும்பை அணி வீரர்கள் திணறினர்.

- Advertisement -

அந்த அணியில் அதிகபட்சமாக திலக் வர்மா 31 ரன்கள், கேப்டன் சூர்யகுமார் யாதவ் 29 ரன்களும் திரட்டினர்.எனினும், கடைசியில் களமிறங்கி அதிரடி காட்டிய சென்னை அணியின் முன்னாள் ஆல் ரவுண்டர் தீபக் சாஹர் 15 பந்துகளில் 28 ரன்களை அடிக்க, மும்பை இந்தியன்ஸ் 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 155 ரன்கள் என்ற ஸ்கோரை எட்டியது.

- Advertisement -

சென்னை அணியில் அதிகபட்சமாக நூர் அகமது 4 விக்கெட்டுகளை கைப்ற்றினார். தொடர்ந்து களம் இறங்கிய சென்னை அணியின் தொடக்க வீரர் ரச்சின் ரவீந்திரா 65 ரன்களுடன் களத்தில் நின்று வெற்றியை தேடித் தந்தார்.

- Advertisement -

இறுதியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 19.1 ஓவர்களில் 158 ரன்களை கடந்து.4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மும்பை அணியின் புதுமுக சுழற்பந்து வீச்சாளர் விக்னேஷ் புத்தூர் சிறப்பாக பந்து வீசி 3 முக்கிய விக்கெடுக்களை கைப்பற்றினார்.

மும்பை அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்ற சென்னை அணியின் கேப்டன் பேசும்போது ” இன்றைய போட்டியில் நான் வெற்றி பெற்ற அணியில் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது, இன்னும் சிறப்பாக விளையாட விரும்புகிறேன், ஆனால் ஆட்டம் எப்படி செல்ல நினைக்கிறதோ அவ்வாறு தான் நம்மால் ஆட முடியும், அதுதான் அணியின் தேவையும் கூட” என்றார்

- Advertisement -

மேலும் அவர் ” நான், ரச்சின் இப்படி ஆடியது அணிக்கு அதிக சமநிலையை அளித்தது. எனது பேட்டிங் வரிசையை மாற்றியதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். சுழற்பந்து வீச்சாளர்கள் சரியான நேரத்தில் சரியான இடத்தில் பந்து வீசினர். ஏலத்திற்குப் பிறகு, சேப்பாக்கத்தில் அந்த மூன்று சுழற்பந்து வீச்சாளர்களும் இணைந்து பந்து வீசினர் என்பது எங்களுக்கு மிகவும் உற்சாகமாக இருந்தது. கலீல் அனுபவம் வாய்ந்தவர், நூர் ஒரு டிரம்ப் கார்டு பிளேயர். அதனால்தான் நாங்கள் அவரை அணியில் சேர்க்க விரும்பினோம்.தோனி இந்த ஆண்டு மிகவும் ஃபிட்டாக இருக்கிறார், அவர் இன்னும் இளமையாகத் தெரிகிறார்” என்றார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles