நீங்க எதிர்பார்த்த அறிவிப்பு வராது சிஎஸ்கே ரசிகர்களே.. தோனி இன்னும் ஒரு சீசன் ஆடப் போகிறாராம்

ஐபிஎல் தொடரின் கடைசி கட்ட லீக் போட்டிகள் இன்று முதல் தொடங்கி உள்ளது. பெங்களூர் மைதானத்தில் நடக்கவிருந்த ஆர்சிபி – கேகேஆர் அணிகளுக்கு இடையிலான லீக் போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளிகள் அளிக்கப்பட்ட நிலையில், கேகேஆர் அணி பிளே ஆஃப் ரேஸில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளது.

- Advertisement -

வாய்ப்பில்லை

இதன் மூலமாக சிஎஸ்கே, ராஜஸ்தான், ஐதராபாத் ஆகிய அணிகளைத் தொடர்ந்து நடப்பு சாம்பியன் கேகேஆர் அணியும் வெளியேறிவிட்டது. இந்த சீசனில் சிஎஸ்கே அணியை பொறுத்தவரை 12 போட்டிகளில் விளையாடி 3 வெற்றி, 9 தோல்வி உட்பட 6 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் உள்ளது. பிளே ஆஃப் வாய்ப்பை இழந்ததோடு, மிகவும் மோசமான தோல்விகளை அடைந்து வருகிறது.

- Advertisement -

இதனால் சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனியையே அந்த அணியின் ரசிகர்கள் ஓய்வு பெறுமாறு அறிவுறுத்தி வருகின்றனர். இந்த சீசன் முடிவில் தோனியின் ஓய்வு முடிவு வெளியாகலாம் என்று சொல்லப்பட்டு வந்தது. இந்த சூழலில், சிஎஸ்கே அணி நிர்வாகத்திடம் தோனி இதுவரை எந்த முடிவையும் கூறவில்லை என்று சொல்லப்படுகிறது.

- Advertisement -

தோனி முடிவு

அடுத்த மினி ஏலத்தின் போது தோனி தனது முடிவை எடுக்க உள்ளார். அதற்கு இன்னும் 6 மாதங்கள் இருப்பதால், இடைப்பட்ட காலத்தில் தோனியின் ஃபிட்னஸ் மற்றும் மனதை பொறுத்தே அவரின் ஓய்வு முடிவு அமையும். அதேபோல் சிஎஸ்கே அணியில் ஏராளமான சிக்கல்கள் இருப்பதால், தோனியை வெளியில் விடவும் சிஎஸ்கே நிர்வாகம் தயாராக இல்லை.

இதனால் தோனியை அணியில் வைத்தவாறே, சிஎஸ்கே அணியின் பிரச்சனைகளை சரி செய்ய அந்த அணியின் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதனால் கடைசி போட்டியின் போது எந்த அறிவிப்பும் தோனியிடம் இருந்து வராது என்று நம்பப்படுகிறது. இந்த சீசனிலேயே சிஎஸ்கே அணி சிறந்த வீரர்களை கொண்டு கட்டமைப்பட்டு வரும் சூழலில், மினி ஏலத்தில் சில வெளிநாட்டு வீரர்களை மட்டுமே வாங்க திட்டமிட்டு வருகின்றனர்.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles