இதுதான்டா என்னோட பிராண்ட்.. “கேப்டன் கூல்” அடையாளத்தை பதிவு செய்த தோனி.. இந்தியாவில் முதல் விளையாட்டு வீரர்

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து 2020ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி தோனி ஓய்வை அறிவித்தார். கடைசியாக 2019ம் ஆண்டு நடந்த உலகக்கோப்பை தொடரின் அரையிறுதி போட்டியில் தோனி விளையாடி இருந்தார். அதன்பின் சிஎஸ்கே அணிக்காக மட்டும் ஐபிஎல் தொடரில் விளையாடி வருகிறார். 43 வயதை தோனி எட்டியுள்ள நிலையில், அவர் அடுத்த சீசனில் விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

- Advertisement -

கேப்டன் கூல்

சிஎஸ்கே அணியின் ரசிகர்கள் தோனி அவருடைய கடைசி கிரிக்கெட் போட்டியை சேப்பாக்கம் மைதானத்தில் விளையாட வேண்டும் என்று விருப்பம் தெரிவித்து வருகின்றனர். அதேபோல் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும், தோனியின் மார்க்கெட் மதிப்பு கொஞ்சம் கூட குறையவில்லை. அவரின் வருமானம் தொடர்ந்து உச்சத்தில் இருந்து வருகிறது.

- Advertisement -

இந்த சூழலில் தோனியை ரசிகர்கள் செல்லமாக அழைத்து கேப்டன் கூல் என்ற அடைமொழியை பதிவு செய்திருக்கிறார். அதாவது டிரேட்மார்க் ரிஜிஸ்டர் போர்டல் மூலம் கேப்டன் கூல் என்ற டைட்டலுக்கு விண்ணப்பித்துள்ளார். இதன் மூலமாக கேப்டன் கூல் என்ற வார்த்தையை தோனியை தவிர்த்து வேறு யாரும் வியாபார நோக்கத்திற்காக பயன்படுத்த முடியாது.

- Advertisement -

முதல் கிரிக்கெட் வீரர்

அதனை ட்ரேட்மார்க் ரிஜிஸ்டர் போர்டலும் அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்துள்ளது. இதுபோல் ஏற்கனவே கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ சிஆர்7 என்ற பெயரையும், உசைன் போல்ட் தனது லைட்னிங் போல்ட் போஸையும், மைக்கில் ஜோர்டன் தனது ஏர் ஜோர்டன் என்ற பெயரையும் பதிவு செய்துள்ளார்.

இதன் மூலமாக இந்தியாவில் தனது அடையாள பெயரை பதிவு செய்த முதல் கிரிக்கெட் வீரராக தோனி புதிய பெருமையை பெற்றுள்ளார். அதேபோல் தோனி கேப்டன் கூல் என்ற பெயரில் தனது புதிய பிராண்ட் ஒன்றை அறிமுகம் செய்ய உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகலாம்.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles