எங்க தல தோனி வேற ரகம்.. ஐசிசி விருது வாங்க கூட போக மாட்டோம்.. ஆனா நண்பன் பிறந்தநாளுக்கு சரியா போய்ருவோம்

இந்திய கிரிக்கெட்டின் வெற்றிகரமான கேப்டன் தோனி. டி20 உலகக்கோப்பை, ஒருநாள் உலகக்கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபி என்று 3 ஐசிசி கோப்பைகளை வென்ற ஒரே இந்திய கேப்டன் தோனி தான். 2019ஆம் ஆண்டு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருடன் தோனி ஓய்வு பெற்றார். இதன்பின் அதிகாரப்பூர்வமாக 2020ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி அறிவித்தார்.

- Advertisement -

தோனி வீடியோ

ஆனாலும் ஐபிஎல் தொடரில் தோனி சிஎஸ்கே அணிக்காக தொடர்ச்சியாக விளையாடி வருகிறார். இதனால் சென்னை அணியின் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். கடந்த சீசனில் சிஎஸ்கே அணி கடைசி இடத்தில் நிறைவு செய்தாலும், சேப்பாக்கம் மைதானத்தில் தோனி கடைசி போட்டியில் விளையாட வேண்டும் என்று ரசிகர்கள் விரும்பி வருகின்றனர்.

- Advertisement -

இருந்தாலும் தோனி தனது முடிவை டிசம்பர் மாதத்தில் அறிவிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் தோனியின் ஒவ்வொரு புகைப்படம், ஒரு வீடியோவும் கூட சோசியல் மீடியாவில் கொண்டாடப்பட்டு வருகிறது. தற்போது தோனி தனது சிறு வயது நண்பரின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக அவரதி வீட்டிற்கே சர்ப்ரைஸாக சென்றிருக்கிறார்.

- Advertisement -

எங்க தல வேற ரகம்

சாதாரண டீ ஷர்ட், நைட் பேண்ட் அணிந்து கொண்டு அந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டிருக்கிறார். இதனை பார்த்த தோனியின் நண்பர், ஆனந்த கண்ணீருடன் கேக் வெட்டினார். அதனை வெட்டி தோனிக்கு ஊட்டிவிட முயற்சிக்கும் போது கூட, நீ இந்த வீட்டில் இருக்க வேண்டும் நண்பா.. முதலில் உன் மனைவிக்கு ஊட்டிவிடு என்று ஜாலியாக கலாய்த்துள்ளார்.

அண்மையில் ஐசிசி ஹால் ஆஃப் ஃபேம் பெருமை தோனிக்கு அளிக்கப்பட்டது. அதனை பற்றி தோனி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூட ஒரு பதிவையும் போடவில்லை. ஆனால் தனது நண்பனின் பிறந்தநாளுக்கு தோனி சரியாக ஆஜராகி இருக்கிறார். இதனால் தோனியின் ரசிகர்கள் வாழ்க்கைக்கு என்ன அவசியம் என்று தோனிக்கு தெரிந்திருக்கிறது. இதுதான் எங்க தல என்று கொண்டாடி வருகின்றனர்.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles