கோலிக்கு உதவியதால் எழுந்த சர்ச்சை.. தக்க பதிலடி கொடுத்த நியூசிலாந்து வீரர் மிட்செல்.. என்ன நடந்தது.?

13 வது உலகக்கோப்பை தொடரில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று இருக்கின்றன. கடந்த 44 நாட்களாக நடைபெற்று வந்த இந்த கிரிக்கெட் திருவிழா தற்போது இறுதி கட்டத்தை எட்டி இருக்கிறது. 13 வது உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் சூடப்போகும் அணி எது என்பது தொடர்பாக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

- Advertisement -

இந்நிலையில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதிய முதல் அரை இறுதி போட்டி மும்பையில் புதன்கிழமை நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 397 ரன்கள் குவித்தது. விராட் கோலி 117 ரன்களும் ஸ்ரேயாஸ் ஐயர் 105 ரன்கள் எடுத்தனர். இந்தப் போட்டியில் சதம் எடுத்ததன் மூலம் சச்சின் டெண்டுல்கரின் ஒரு நாள் போட்டிகளில் அதிக சதம் எடுத்த வீரர் என்ற சாதனையையும் முறியடித்தார் விராட் கோலி.

- Advertisement -

மும்பையில் நிலவிய கடும் வெப்பம் மற்றும் ஈரப்பதம் காரணமாக முதலில் பேட்டிங் செய்த இந்திய வீரர்களுக்கு தசைப்பிடிப்பு மற்றும் கிராம்ஸ் ஏற்பட்டது. இதனால் 77 ரன்கள் எடுத்து சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த கில் ரிட்டயர் ஹர்ட் ஆகி வெளியேறினார். மேலும் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலியும் கிராம்பால் கஷ்டப்பட்டார். இந்த நேரத்தில் நியூசிலாந்து அணியின் வீரர்கள் அவருக்கு உதவியது தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்திருக்கின்றன.

- Advertisement -

இது தொடர்பாக ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வேக பந்துவீச்சாளர்
சைமன் ஓ’டோனல் என்பவர் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார். மேலும் நியூசிலாந்து அணியை கடுமையாக விமர்சித்திருக்கும் இவர் விராட் கோலி உங்கள் அணிக்கு எதிராக 400 ரன்கள் குவிக்க போராடி வருகிறார். நீங்கள் அவருக்கு உதவி செய்கிறீர்கள். ஸ்பிரிட் ஆப் த கேம் இருக்க வேண்டியது தான். அதற்காக ஒருவன் உங்கள் நாட்டிற்கு எதிராக உங்களை வீழ்த்தி கொண்டிருக்கும்போது அவருக்கு கை கொடுத்து உதவுவது எந்த விதத்தில் நியாயம் என விமர்சனம் செய்துள்ளார்.

இந்த சர்ச்சைகளுக்கு கடுமையான பதிலடி கொடுத்திருக்கிறார் நியூசிலாந்து அணியின் மிடில் ஆர்டர் ஆல் ரவுண்டர் டேரில் மிட்செல். இவர் அந்தப் போட்டியில் 134 ரன்கள் எடுத்து நியூசிலாந்து அணியின் வெற்றிக்காக போராடினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. எங்களின் நாடு மற்றும் பாரம்பரியம் எது என்று எங்களுக்கு தெரியும். இன்னும் சிறு பிள்ளை போல் இருக்காமல் வளருங்கள் என்று கடுமையான விமர்சனங்களை முன் வைத்திருக்கிறார் அவர்.

- Advertisement -

மும்பையில் இருந்து நியூசிலாந்து புறப்படுவதற்கு முன்பாக செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்த அவர் ” ஒரு நியூசிலாந்து நாட்டின் குடிமகனாக நாங்கள் கிரிக்கெட் விளையாடும் விதத்தை நினைத்து பெருமைப்படுகிறோம். மக்கள் நாட்டிற்கு எது தகுந்ததோ அந்த வழியிலேயே நாங்கள் கிரிக்கெட் விளையாட விரும்புகிறோம். மேலும் எங்களிடமிருந்து இது போன்ற தகுதிகளை எங்களது குழந்தைகளும் கற்றுக் கொள்ள வேண்டும் என்று நாங்கள் ஆசைப்படுகிறோம்” என தெரிவித்திருக்கிறார்.

மேலும் தொடர்ந்து பேசிய அவர் ” நாங்கள் எங்களது முறைப்படியே எப்போதும் கிரிக்கெட்டை விளையாடுவோம். எங்களது விளையாட்டை பார்த்து மற்ற நாடுகளும் எங்களுக்கு மரியாதை தரும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. நாங்கள் கிரிக்கெட் விளையாடும் விதத்தை நினைத்து எப்போதும் பெருமை கொள்கிறோம். நாங்கள் நியூசிலாந்து அணியின் வீரர்களாக எப்போதும் செய்வதையே தொடர்ந்து செய்வோம் என தெரிவித்துள்ளார்.

நடப்பு உலகக் கோப்பை தொடரில் 10 போட்டிகளில் விளையாடி இருக்கும் டேரில் மிட்செல் 552 ரன்கள் எடுத்திருக்கிறார். இவரது சராசரி 69. மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 111.06. இதில் இந்திய அணிக்கு எதிராக இவர் அடித்த இரண்டு சதங்களும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வருட உலகக் கோப்பையில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் நான்காவது இடத்தில் இருக்கிறார் இவர்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles