கடந்த ஐபிஎல் தொடரின் கோப்பையை வென்றிருந்த ஐயரை கொல்கத்தா அணியின் நிர்வாகம் அணியின் தக்கவைக்க தவறி அவரை ஏலத்தில் விட்டது. ஏலத்தின் போது அவரை பஞ்சாப் அணி நிர்வாகம் எடுத்தது.
பிறகு கொல்கத்தா அணியின் கேப்டன் யார் என்று எதிர் பார்ப்பு அனைவரிடமும் எழுந்தது.அப்போது மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ஆல்-ரவுண்டர் அணியை வழிநடத்தலாம் என்ற யூகங்களைத் தூண்டியது. பிறகு அணி நிர்வாகம் அனுபவம் வாய்ந்த ரஹானேவை கோப்பையை தக்க வைக்கும் நோக்கத்தில் கேப்டன் பொறுப்பை ஒப்படைத்தது. இதைப் பற்றி முன்னாள் இந்திய தொடக்க ஆட்டக்காரர் ஆகாஷ் சோப்ரா கூறும்போது இவரை கேப்டனாக அறிவித்ததில் ஏதாவது காரணம் இருக்கலாம் என்று கூறினார்.
இது குறித்து அவர் கூறும் போது “அஜிங்க்யா ரஹானே, இன்றுவரை 25 ஆட்டங்களில் கேப்டனாக இருந்துள்ளார். எனவே அவர் ஒரு புதியவர் என்பதல்ல. அவர் சமீபத்தில் தனது அணியை (சையத் முஷ்டாக் அலி டிராபி) வெற்றிக்கு அழைத்துச் சென்று மும்பை மற்றும் இந்தியாவின் கேப்டனாக இருந்துள்ளார். அவர் பார்டர்-கவாஸ்கர் டிராபியை இளம் வீரர்களுக்கு உண்டு இந்தியாவுக்காக கைப்பற்றி கொடுத்தவர். அவருக்கு நிறைய அனுபவம் உள்ளது, ஆனால் அவர் நிரூபிக்க வேண்டிய விஷயங்களைப் பற்றி யோசித்துப் பாருங்கள்” என்று சோப்ரா கூறினார்.
மேலும் அவர்”ஒவ்வொரு கேப்டனும் எவ்வளவு அதிகமான தொகைக்கு அணியலால் எடுக்கப்பட்டுள்ளார் என்ற கணக்கெடுத்து பார்க்கும்போது வேறு எந்த கேப்டனும் ஒற்றை இலக்கத்திற்கும் வாங்கப்படவில்லை அல்லது தக்க வைக்கப்படவில்லை.இவர் 1.50 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டார். இவ்வளவு குறைந்த ரூபாய்க்கு எடுத்து ஒருவர் கேப்டன் ஆக்கப்பட்டுள்ளார் என்றால் அது ரகானே ஆகத்தான் இருப்பார்” என்றார்.
தொடர்ந்து அவர் கூறும் போது”அவருக்கு மிகப்பெரிய சவால் என்னவென்றால், அது வெற்றி பெற்ற அணி. வெற்றி பெறும் அணியை எங்கு கொண்டு செல்வீர்கள்? இருப்பினும், அவர்கள் கடைசியாக வெற்றி பெற்றதால் இந்த முறை வெற்றி பெற வேண்டும் அல்லது குறைந்தபட்சம் இறுதிப் போட்டிக்கு வர வேண்டும் என்பது எதிர்பார்ப்பு. இது ஒருபோதும் எளிதானது அல்ல, ஏனென்றால் கிரீடத்தைத் தக்கவைத்துக்கொள்வது முதல் முறையாக அதை வெல்வதை விட மிகவும் கடினமானது. எனவே இது ஒரு பெரிய கேள்வியாக இருக்கும்,” என்று அவர் மேலும் கூறினார்.
கொல்கத்தாவில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை இன்று மாலை கொல்கத்தாவில் எதிர்கொள்ள உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

