ஐபிஎல் 2024.. சிஎஸ்கே எதிர்கொண்ட அதே பிரச்சனை தற்போது மும்பை அணிக்கும்.. சிக்கலில் தவிக்கும் இரு அணிகள்.. காரணம் என்ன?

ஐபிஎல் சீசன் வருகிற 22ஆம் தேதி சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்க இருக்கிறது. இதன் முதல் போட்டியில் சென்னை மற்றும் பெங்களூர் அணிகள் மோதுகின்றன. இரு அணிகளுமே பலம் வாய்ந்ததால் இப்போட்டியில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

- Advertisement -

சென்னை அணியைப் போன்றே ஐபிஎல் ஐந்து முறை பட்டம் பெற்ற சாம்பியன் ஆன மற்றொரு அணி மும்பை இந்தியன்ஸ். நட்சத்திர வீரர்களைக் கொண்ட மும்பை இந்தியன்ஸ் அணியும் ஆறாவது கோப்பையை கைப்பற்றும் முனைப்பில் களமிறங்கும். நடந்து முடிந்த மினி ஏலத்திற்கு பிறகு சென்னை அணி மிகவும் பலம் வாய்ந்ததாக காணப்பட்டது.

- Advertisement -

ஏனெனில் சென்னை அணிக்காக முந்தைய சீசனில் விளையாடிய வீரர்கள் மற்றும் தற்போது ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர்கள் என மிக பலம் வாய்ந்ததாக காணப்பட்டது. ஆனால் சென்னை அணிக்கு முதல் இழப்பாக ஆல் ரவுண்டர் சிவம் துபே ரஞ்சிப் போட்டியில் ஏற்பட்ட காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் விளையாடுவது சந்தேகம் என்று கூறப்பட்டது.

- Advertisement -

ஆனால் அதற்குப் பிறகு அவரது காயம் குறித்து தகவல் எதுவும் வெளிவரவில்லை. பின்னர் மற்றொரு இழப்பாக சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர் கான்வே காயமடைந்தார். நியூசிலாந்து அணியைச் சேர்ந்த அவர் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டி20 போட்டியின் போது கட்டை விரலில் காயம் ஏற்பட்டு அறுவை சிகிச்சை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியது.

எனவே அவரது இழப்பை ஈடு செய்யும் வகையில் மாற்றுவீரரை தேடுவதற்குள் மற்றொரு இழப்பாக இலங்கை அணியைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் பத்திரானா வங்காளதேச அணிக்கு எதிரான போட்டியில் கலந்து கொண்ட போது காயமடைந்தார். எனவே அவருக்கு பதிலாக மாற்று வீரரை தேடும் முயற்சியில் களம் இறங்கிய சென்னை அணி இலங்கையைச் சேர்ந்த 17 வயது கல்லூரி மாணவர் ஒருவரை கண்டுபிடித்து தற்போது அவரை வலை பயிற்சியில் பந்து வீச வைத்துக் கொண்டிருக்கிறது.

- Advertisement -

எனவே பத்திராணா இந்த ஐபிஎல் தொடரில் கலந்து கொள்ள மாட்டார் என்று உறுதியான தகவல் வெளிவரும் பட்சத்தில், இந்த புதிய பவுலர் சென்னை அணிக்கு களமிறங்க அதிக வாய்ப்புள்ளது. இது ஒரு புறம் இருக்க, சென்னை அணியின் பரம எதிரியான மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் தற்போது இதே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. மும்பை அணி சமீபத்தில் இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளரான தில்சன் மதுசங்காவை 4.6 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.

வேகப்பந்துவீச்சில் ஸ்விங் மற்றும் கட்டர்கள் வீசக்கூடிய இவரை ஏலத்தில் எடுத்த மும்பை அணிக்கு தற்போது அவரும் காயத்தில் சிக்கி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதே பங்களாதேஷ் அணிக்கு எதிரான தொடரில் ஒரு நாள் போட்டியில் விளையாடிய அவர் தொடை பகுதியில் காயமடைந்தார். ஸ்கேன் செய்து பார்த்ததில் அவருக்கு காயம் ஏற்பட்டிருப்பது உறுதியாகி இருக்கிறது. இதனால் மும்பை அணிக்கு இந்த சீசனில் தில்சன் மதுசங்கா விளையாடுவாரா? என்பது சந்தேகமே.

எனவே ஐபிஎல்லின் இரு பெரும் அணிகளான மும்பை அணிக்கு தில்சன் மதுசங்கா கிடைக்காதது போல், சென்னை அணிக்கு பத்திரானா கிடைக்கவில்லை. இதனால் தற்போது இரு அணிகளும் ஒரே பிரச்சனையை எதிர்கொண்டு இருக்கிறது. இதனால் மும்பை அணி இவருக்கான மாற்று பவுலரைத் தேர்வு செய்வது கட்டாயமாகும்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles