விவாகரத்து செய்தால் என்ன.. சாஹல் இப்போதும் எனக்கு மெசேஜ் அனுப்புவார்.. ஷாக் கொடுத்த நடிகை தனாஸ்ரீ வர்மா 

பஞ்சாப் அணியின் முன்னணி ஸ்பின்னர் யுஸ்வேந்திர சாஹல் மற்றும் நடிகை தனாஸ்ரீ வர்மா இருவரும் 2020ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். சாஹலை திருமணம் செய்த பின் தனாஸ்ரீ வர்மாவுக்கு இன்ஸ்டாகிராமில் ரசிகர்களின் ஆதரவு அதிகரித்தது. இதனால் இன்ஸ்டாகிராம் பிரபலமாக வலம் வந்த தனாஸ்ரீ வர்மா, கொஞ்சம் கொஞ்சமாக டான்சராக உருமாறினார். 

- Advertisement -

தனாஸ்ரீ வர்மா பேட்டி

ஆனால் சாஹல் – தனாஸ்ரீ இடையிலான உறவு கொஞ்சம் கொஞ்சமாக பிரிவை நோக்கி பயணித்தது. 2023ஆம் ஆண்டுக்கு பின் இருவரும் தனியாக வசிக்க தொடங்கிய நிலையில், கடந்த ஐபிஎல் தொடருக்கு முன்பாக விவாகரத்து பெற்றனர். விவாகரத்திற்கு பின் சாஹல் தனாஸ்ரீ வர்மாவுக்கு ரூ.4.75 கோடி அலிமோனியாக கொடுத்து வருகிறார். 

- Advertisement -

இதன்பின் தனாஸ்ரீ வர்மா மாடலிங் துறையில் தீவிரமாக இருந்து வருகிறார். சில படங்களில் நடிக்க தொடங்கிய தனாஸ்ரீ வர்மா, நடன இயக்குநர் ஃபரா கானின் நிகழ்ச்சியில் பங்கேற்று நேர்காணல் அளித்துள்ளார். அப்போது ஃபரா கான், நீங்கள் முதல்முறையாக தனியாக வாழ்கிறீர்கள் அல்லவா? முதலில் பெற்றோருடன் வாழ்ந்தீர்கள்.. பின் சாஹலை திருமணம் செய்து வாழ்ந்தீர்கள்.

- Advertisement -

சாஹல் ஸ்வீட்

நீங்கள் இருவரும் என்னுடைய பார்ட்டி ஒன்றுக்கு வந்தது நன்றாக நினைவில் உள்ளது என்று கேள்வி கேட்டார். அதற்கு தனாஸ்ரீ வர்மா, நானும் சாஹலும் இப்போதும் தொடர்பில் இருக்கிறோம். அவர் நிச்சயமாக ஸ்வீட்டான மனிதர்.. இப்போதும் எனக்கு மெசேஜ் அனுப்பு, போன் செய்து பார்த்து கொள்வார் என்று தெரிவித்துள்ளார். 

சாஹல் தற்போது புதிய காதலியான ஆர்ஜே மாவேஷ் உடன் உறவில் உள்ள நிலையில், முன்னாள் மனைவியுடன் அவ்வப்போது பேசுவது ரசிகர்களிடையே பாராட்டுக்களை பெற்று வருகிறது. அதேபோல் விரைவில் சாஹல் அவரை திருமணம் செய்வார் என்றும் ரசிகர்கள் கூறி வருகின்றனர். மேலும், தனாஸ்ரீ வர்மா சில நாட்களுக்கு முன் சாஹலை விமர்சித்திருந்தது பேசுபொருளாகியது.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles